பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மக்கள் குழு ஒப்பந்தம் செய்தால், உற்றார் - உறவினர், ஊரார் - உலகத்தார் நம்மை மிகவும் மட்டமாக மதிப்பார்களே என்று அஞ்சித் தீமை செய்யாதிருத்தலாகும். தண்டிக்கும் அரச ஆணைக்கே அஞ்சாதவர்கள், தண்டிக்கும் உரிமை அவ்வளவாக இல்லாத சமூகச் சூழ்நிலைக்கு எங்கே அஞ்சப் போகிறார் கள்? இருப்பினும், சமூகம் பழிக்குமே என்று நாணியாவது ஒருசிலர் தீமை செய்யாதிருப்பது மக்களினத்திற்கு இரண்டாவது ஆதாயக் கணக்காகும். கடவுள் நம்பிக்கை: மூன்றாவதாக, அரச ஆணைக்கும் சமூகச் சூழ்நிலைக் கும் அஞ்சுபவர்களைவிட, கடவுளுக்கு அஞ்சுபவர் மிக மிகக் குறைவே! ஏனெனில், மக்கள், அரச ஆணையினையும் சமூகச் சூழ்நிலையினையும் நேரில் காண்கின்றார்கள். இவ் விரண்டாலும், தவறு செய்வோர்க்குத் தண்டனை கிடைப் பதையும் நேரில் அறிகிறார்கள். ஆனால், கடவுளை இவர்கள் நேரில் கண்டதில்லை; மற்றும், தாம் செய்யும் தவறுகளுக்குக் கடவுள் நேருக்கு நேர் உடனடியாகத் தண்டனை கொடுப்பதாகவும் அறியவில்லை; எனவே, கடவுளை எளிதில் சாப்பிட்டு விடுகிறார்கள். இதற்குச் சான்று, நாள்தோறும் மணிக்கணக்கில் கடவுள் வழிபாடு செய்வோர் பலர், நாள்தோறும் கணக்கற்ற தீமைகளைச் செய்து வருவதேயாம். இருப்பினும், கடவுளுக்கும் அஞ்சித் தீமை செய்யாதவரும் ஒரு சிலர் கண்ணை-மூஞ்சைக்' காட்டிக் கொண்டிருப்பது, மக்கள் குலத்தின் மூன்றாவது ஆதாயக் கணக்காகும். - . மனச் சான்று: இறுதியாக மனச் சான்றுக்கு வருவோமே! அரச ஆணைக்கும் சமூகச் சூழ்நிலைக்கும் கடவுளுக்கும் அஞ்சு