பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 93 பவர்களைக் காட்டிலும், தம் சொந்த மனச் சான்றுக்கு அஞ்சுபவர்கள் மிகமிக மிகக் குறைவே! ஏனெனில், அரசும் சமூகமும் கடவுளும் தம்மைக் தண்டிக்கலாம்; ஆனால் தம் மனச் சான்று தம்மைக் குறிப்பாக-சிறப்பாக ஒன்றும் தண்டிக்க முடியாதே' என்பது அவர்தம் எண்ணம். ஆனாலும் இங்கே, " தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் ” என்னும் வள்ளுவரின் வாய்மொழி நினைவுக்கு வராமல் இல்லை. ஆனால் மரத்துப்போன மனம் உடையவர்க்கு மனச் சான்று ஏது? மனச் சான்று என ஒன்று இருந்தால் அல்லவா அது அவர்களைத் தண்டிக்கக் கூடும்? இத்தகைய உலகிலும் மனச் சான்று என ஒன்று உடையவராகி, தம் நெஞ்சே தம்மைச் சுடுவதற்கு அஞ்சி, தவறு செய்யாதவர் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த அமைப்பு மக்கள் இனத்தின் நான்காவது ஆதாயக் கணக்காகும். உண்மையும் போலிமையும்: மொத்தத்தில் காணுங்கால், அரச ஆணை, சமுதாயச் சூழ்நிலை, கடவுள் நம்பிக்கை, மனச்சான்று ஆகிய நான்கனுள், முன்னைய மூன்றுக்கு அஞ்சித் தீயன செய்யா திருப்பதைக் காட்டிலும், 'தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற வகையில், மனச் சான்றுக்கு அஞ்சித் தீயன செய்யாது, மேலும் நல்லன செய்தலே சாலச் சிறந்தது; இஃதே இயற்கை அறமாகும்-இஃதே உண்மை அறமாகும். இஃதன்றி முன்னைய மூன்றுக்கும் அஞ்சித் தீமை செய்யா திருப்பதும் நல்லன செய்வதாக நடிப்பதும் போலிமை அறமேயாம்.