பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மக்கள்குழு ஒப்பந்தம் தெய்வத் தன்மை : மக்கள் பெரும்பாலும் பிறர் நலம் பேணுவதனினும், தம் நலம் பேணுவதே இயற்கை; இஃது ஒருவகை உயிரியல்' என்றும் கூறலாம். இதனால்தான், சிலர்-இல்லையில்லை பலர், தம் நலத்திற்காகப் பிறர் நலத்தைப் படுகொலை புரிகின்றனர்; பிறர் நலத்தை வெட்டிப் புதைத்து, அந்தச் ‘சமாதி’யின்மேல் தம் நலம் என்னும் கொடியை நட்டுப் பறக்க விடுகின்றனர். இங்கே மனச்சான்றுக்கு இடமில்லைஆம்-இடமேயில்லை. இந்நிலையில் ஒருசிலர் தம் நலத்தைப் போலவே பிறர் நலத்தையும் பேணுகின்றனர் எனில், - இன்னும் வேறுசிலர், தம் நலத்தைவிட பிறர் நலத்தையே பெரிதாய்ப் பேணுகின்றனர் எனில், அவர்களிடத்தே மனச் சான்று வேலை செய்கிறது. என்பது பொருள். இங்கே மனச்சான்று தெய்வத்தன்மை பெற்றுவிடுகிறது. இயற்கையும் செயற்கையும் : உண்மையான மனச்சான்றை உருவாக்கவே கடவுள் நம்பிக்கை, சமூகக் கட்டுப்பாடு, அரச ஆணை என்னும் மூன்றும் வேலை செய்கின்றன. இம்மூன்றின் ஆற்றலால் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தாக்கப்பட்டு வருகின்ற மக்களினத்திலே, இத்தாக்குதலின் பயனாய் மனச்சான்று என ஒன்று செயற்கையாக உருவாகி, இயற்கைப் பண்பு என்று சொல்லும் அளவிற்கு நாளடைவில், பழக்கப்பட்ட பொருளாகி நல்ல வேலை செய்து வருகிறது. ஆனால், இந்த மனச் சான்று, இத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழக்கப் பட்டு இயற்கைப் பண்டிாகியுங்கூடி, எல்லாரிடத்தும் நின்று நிலைத்து நற்செயல் புரியாமல், ஒரு சிலரிடத்து மட்டும்ஒருசில வேளைகளில் மட்டும் தலைகாட்டி மறைந்து விடுவது, மக்கள் குலத்திற்குப் பெரிய இழப்புக் கணக்கேயாம்.