பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஒரு நல்ல குறிக்கோள் குறிக்கோள் : " பாலனாய்க் கழிந்தநாளும் பனிமலர்க் கோதை மார்தம் மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டிச் சரத்து ளானே.” என நவின்றுளார் நாவுக்கரசர். குழவிப் பருவ முதல் முதுமைப் பருவம் வரை மாந்தர்க்கு வாழ்க்கையில் ஒரு நல்ல குறிக்கோள்-ஓர் உயரிய நோக்கம் இருக்கவேண்டும் என்பதை இந்தத் தேவாரப் பாடலால் பொதுவாக அறிந்து கொள்ளலாம். வினா-விடை : சமயப் பெரியாராகிய நாவுக்கரசரின் குறிக்கோள், தன்னலம் துறந்து, பிறர் நலம் பேணி, உலகிற்குத் தொண்டு புரிந்து இறைவனை அடையவேண்டும் - என்பதாகும். ஒருவர் தாம் இறைவனை அடைவதற்காக-அதாவது, வீடுபேறு எய்துவதற்காக அதற்குரிய நெறியில் ஒழுகுவதுதன்னலமாயிற்றே! நாவுக்கரசர் பிறர்நலம் பேணிச் செய்த தொண்டு யாது?- என்ற வினா இங்கே காத்துக் கிடப்பது தெரிகிறது. அதற்குரிய விடையும் இங்கே காத்துக் கிடக்கிறது :