பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #gt

இந்த உலகம் என்ற சக்கரத்திலே, ஆரக்கால்களாக

இருப்பவர்கள் தத்துவஞானிகள் முதல் வள்ளல்கள் வரை

  1. # <=*#,6) lit:

மனிதன் வாழும்போது பிறருக்கு எதையும் கொடுத்து விடுவதில்லை.

ஒழுக்கத்தைப் பற்றி விளக்க வந்த தத்துவஞானிகள் எல்லாம், 'மனிதன் எதையும் தேக்கிக் கொள்கின்ற பண்டங்கள்” என்றே குறிப்பிடுகின்றனர்!

இயற்கை அளித்த முழு உருவம்தான்் மனிதன், பேரறிஞன் டார்வினது சித்தாந்தப்படி, 'தெளிவற்றக் குரங்கின் உள்ளம், ஐந்து பெரிய கலைஞர்களால், மந்தி மனிதனாக்கப் டட்டான்' என்பதாகும்.

உதாரணமாக, மனிதன் கண்களுக்குப் பூக்கள் தான்் விருத் தளிக்கின்றன. பூக்களுக்கு மனிதன் கண்கள் அவசியமில்லை.

மனிதனுடைய செவிகளுக்குக் குயில்கள்தான்் தேவை யான இசை ஓசையைக் கொடுக்கின்றன!

இவை போல, மனிதனுடைய ஐம்புலன்களுக்கும், இயற்கைதான்் எல்லாவற்றையும் வழங்குகின்றதே தவிர, மனிதன் பார்த்து இயற்கைக்கு எதையும் கொடுப்பதில்லை.

எனவேதான்், மனிதன் ஒரு தேக்கி வைக்கக் கூடிய பொருள் என்றான் மாமேதை டார்வின்!

கருவிலிருந்து கல்லறை வரையில், எல்லாவற்றையும் தேக்கிக் கொண்டு, கடைசியில் உடலைக்கூட ஒர் எட்டடிக் குழிக்குள் பதுக்கி வைத்துக் கொள்கின்றான்

இத்தகைய மனிதன், பக்குவப்பட்டக் கல்வியினால், பழுத்த அறிஞர்களின் தொடர்பால், தன்நிலை அறிந்து, உள்ளொளி எரிய, தன்னையே மற்றவர்களுக்குக் கொடுக்க ஆர்ம்பிக்கின்றான்.

இந்த நிலையை ஒரு மனிதன் அடைய ஆண்டுகள் எத்தனை ஆகும் தெரியுமா?