பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 103

- ரசினார்கள் சிலர்! நன்றி மறந்த பிண்டங்கள் அவை என்பதையும் நாடறியும்!

வடசென்னையிலே இருக்கும் வெள்ளுடைக் கோமான் சர். பி.டி. தியாகராயர் கல்லூரிக்கு, தனது சொந்த வருவாயிலும், நாடக வசூல் வாயிலாகவும், ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு மேலே வாரி வழங்கினார்! அதன் காப்பாளர்களிலே ஒருவராகவும் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

அடையாறிலே இருக்கும் ஒளவை ஹோம் என்ற மாதர் நல வளர்ச்சி நிறுவனத்திற்கு, முப்பதாயிரம் ரூபாயை நன் கொடையாகக் கொடுத்தார் - பரங்கிமலைப் பாரி.

பச்சையப்ப முதலியார், செங்கல்வராய நாயக்கர் போன்றவர்கள் எப்படி கல்விக்காக தமது சொத்துக்களை வழங்கினரோ, அதைப் போலவே எம்.ஜி.ஆரும். வழங்கிக் கல்விக் காவலராக விளங்கினார்:

அறத்தின் சொற்பொருள், 'அற்றது என்பதே! அது, பற்றற்ற நிலை, தன் தலப் பற்றற்றத் துய்மையைச் சுட்டுவதாகும்.

உண்மை, நன்மை, குணம், நல்லும், அருள், தருமம், புண்ணியம், சமைய நம்பிக்கை, ஞானம், நேர்மை, ஒழுங்கு முறை என்று, இடத்திற்கேற்ப பல்வேறு கருத்துக்களில் பயன்படும் சொல் அறம்!

திருவள்ளுவர் பெருமான், 'ஈதலே அறம்' என்றார்: ஈதலுக்கு அடிப்படை வறுமை! அதனாலெழும் பசி: , பிற தேவைகள்!

நெருப்பிலும்கூடத் துங்கலாம்; ஆனால், வறுமை வந்தவன் கண்ணிமைக்கவே முடியாது. எனவேதான்், வறுமை எனப்படும் பாவி’ என்று வறுமையை வயிற்றெரிச்சலோடு சபித்தார் அவர்!

‘மணிமேகலை’ ஆசிரியர், பசியைப் பிணி என்றார்: பசித்த உயிர்கட்கு உணவிடுதலே ஜீவகாருண்யம்! இது வள்ளல் பெருமானின் உயிராபிமான வாக்கு!