பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

${}# மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

பிறப்பு வேதனை, இறப்பு வேதனை, பிற வாழ்வியல் வேதனைகளைவிட மிகமிகக் கொடியது பசி வேதனை! வறுமை வேதனை!

அதனால்தான்், 'கொடிது கொடிது வறுமை கொடிது’ என்று இருமுறை வற்புறுத்திப் புத்தி புகட்டினார் - ஒளவையார்.

வறுமையிலும், இளமையில் வறுமை, அதனினும் கொடிது, ஏனென்றால், மானம், குலம், கல்வி, வண்மை, அறிவு, தான்ம், தவம் முயற்சி, தாளாண்மை, காமுறுதல் என்ற பத்தும் பறந்து போம் என்றார் தமிழ்க் கிழவி - பசி வந்திடில்!

வறுமைப் பிணிகளகற்றிடும் இந்த ஞானத்தை, அறிவை, அதன் அடிச்சுவடுகள் பிறழாமல் ஆற்றி, மக்கள் திலகம் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர்: காரணம் இளமையில் அவர் அதுபவித்த வறுமை! - பசி:

இத்தகைய வறுமையெனும் பாவி, இளம் வயது பள்ளிச் சிறுவர் - சிறுமியர்களைப் பற்றினான் என்றால் அந்த மனிதப் பிஞ்சுகளின் வாழ்வு, பூகம்பத்தில் சிக்கிய பூமிதான்ே!

கல்வி கற்கும் பிள்ளைகள், பசியெனும் கோரப் பிணிக்கு ஆட்பட்டு விடக்கூடாது என்ற மனிதாபிமான அக்கறையினால் தான்், அவர்களுக்குச் சத்துணவு வழங்கும் திட்டத்தைக் கொண்டு, வந்து, வயிற்றைக் குளிர வைத்தார் எம்.ஜி.ஆர்.

அதன் எதிரொலி என்ன? பள்ளிப் பிள்ளைகள் நாள் தோறும் தவறாது பள்ளிகளுக்குப் போகும் ஒழுங்குமுறை உருவானது!

அவ்வாறு அவர்கள் வருகை தருவதனால், கல்வி வளர்ச்சியில், முன்னேறி, கேரள மாநிலத்தின் படிப்பறிவுக்கு அடுத்த நிலையிலே உள்ளது தமிழகம்!

கல்லார்க்கும் கற்றவர்க்கும், பொருள் உள்ளார்க்கும் இல்லார்க்கும், வாலிபர் முதல் வயோதிகர்க்கும் சிறுவர், சிறுமியர்க்கும், பிற எல்லார்க்கும் தேன் சிதறும், பக்திச் சொற் பொழிவுகள் வாயிலாகத் தமிழமுதை விருந்தாகப் படைத்து