பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி {{?

ஆவலறிந்து வருவர் கொலோ - உம்மை

அன்றி ஒரு புகலும் இல்லையோ.....? 'இறைவா! உமையன்றி எனக்கு யாருளர்? நல்ல செழுந்தமிழால் நான் அழைத்தால், என் ஆவல் அறிந்து வரமாட்டீர்களோ.....? என்று, அமரகவி பாரதியார் இறைவனை - தமிழருமை கூறி ஏக்கத்தோடு வேண்டினார்.

இறை வழிபாட்டிலும் அவர் இசைத் தமிழை மறந்தாரில்லை! தமிழ் மண்ணின் உருகி ஒதும் இயல்பு அது:

தேத்தமிழ் தெளித்து, தேவ தேவனைப் பராவிய செந் 'நா அருளாளர் வள்ளல் பெருமான், 'வான் கலந்த மாணிக்கவாசகா....! என்று, வாயார வாழ்த்தி, ஊனுருக உடலுருகப் பாடி பரவசப்பட்டார் - தமிழ் இசையால் ஒதி-ஒதி!

'தத்துவங்கள் தீண்டாத உள்ள கத்தே

தமிழமுத மலரரும்பாய்த் தோன்றி இன்று சித்தாலே மலர்ந்துதயா மனத்தை உலகு

தேர்ந்து கொள வருகுதிதை ஏற்று வாழ்வர்' வாக்கு ஒவ்வொன்றும் விலை மதிக்கவொண்ணா மாணிக்கம் போலப் பாடிச் சென்ற மாணிக்கவாசகப் பெருமான், மேற்கண்ட தமிழ்ப் பண்ணால், தமிழ் பூக்களால், தடாதகைப் பிராட்டி நாயகனை பாசுரம் ஒதி, வழுத்தினார்! பா - பாக்களால், சுரம் - இசைத்துப் பாடி அருள் வேண்டுவது தான்ே பாசுரம்?

"நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்' என்ற ஜனநாயக நா படைத்த நாவுக்கரசர் பெருமான் 'ஒசை ஒலியெலாம் ஆனாய் நீயே" என்று, உலக உருவாக்க விளக்கத்தின் முதல் வித்தான் ஒலியால், அம்மையப்பனை, தமிழ்ப் பண்ணால் பாடி வழிபட்டார்: -

ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் தலையாய கலை - இசைக் கலை! தமிழ் இசை தொன்மையானது: தொல் தமிழர் கண்டு இறையை ஆரர்தித்தது!

தமிழர் வாழ்வுக்குப் பொருளதிகாரம் வழங்கிய 'தொல் காப்பியம்' நூல் - இதற்குரிய தலையாய சான்று! -