பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§

புலவர் கலைமணியின் நடை, இந்த நூலுக்கு மேலும் வலிவும் பொலிவும் சேர்க்கிறது.

இது என் போன்றோரால் சிபாரிசு செய்யப்பட வேண்டிய நூல் அல்ல. இயல்பாகவே, எழுத்து கனமும் கருத்து கனமும் இந்த நூலுக்கு அமைந்திருக்கிறது.

எனவே, பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.

இருப்பினும், ஒரு சம்பிரதாயம் கருதி இந்தப் பாராட்டு எழுதப் புகுந்தேன்.

வாசித்துக் கொண்டிருக்கும் போது, பல இடங்களில் என் கண்கள் பனித்தன.

அண்ணன் திரு. எம்.ஜி.ஆரோடு பழகிய ஆனந்த மயமான நாட்களை, மனம் மீண்டும் மீண்டும் நினைவிற்குக் கொண்டு வந்து அசைபோடலாயிற்று.

வித்தியாசமான ஒரு மனிதரைப் பற்றி - வித்தியாசமான முறையில் எழுதப் பெற்ற வித்தியாசமான நூல். இது.

ஏற்கனவேயே, எல்லோராலும் அறியப்பட்ட திரு. எம்.ஜி.ஆரை, இந்த நூல் இன்னும் கொஞ்சம் விரிவாகவே அடையாளம் காட்டுகிறது.

என்னை வாழ்வித்த வள்ளலைப் பற்றிய நூல் என்பதால், என்னுள் தனி மகிழ்ச்சி தளிர்விட்ட போதிலும்...

வாசிக்கும் அனைவருக்கும், அத்தகு மகிழ்ச்சியை இந்நூல் தோற்றுவிக்கும் என்பதில் அய்யமில்லை.

வாலி

蟹é,9。2翁Q五

12, முதல் தெரு, கற்பகம் அவின்யு, இராஜர் அண்ணாமலைபுரம், சென்னை - 600 028.