பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*懿 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

தொல் என்றால் - பழைய, காப்பு என்றால் அதனைப் பாதுகாப்பது, இயம் என்றால் - அனைவரும் அதன்ன ஏற்கும் வகையில் எடுத்துச் சொல்லும் பான்மை உடையதுதான்ே, தொல்காப்பியம்?

பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, சிலம்பு இசைக்கும் நுட்ப துணுக்கங்கள், சீவக சிந்தாமணி, இன்னபிற இலக்கியங்களிலும் பரந்து கிடப்பது என்ன? இயல்-இசை-நாடகம் அல்லவா?

முத்தமிழின் புகழ் பூத்த இத்தகைய அரும்பெரும் முத்துறைக்கும், தனது ஆட்சியில் என்னென்ன பணிகளை மூத்தாய்ப்பாகச் செய்ய முடியும்?

அதே நேரத்தில், முத்தமிழிலும் புகழ் பெற்ற வித்தகர்கள் திறன்களை எவ்வாறு நாடறியச் சிறப்பிக்க இயலும்?

அந்தந்தத் துறை கலைஞர்களின் வெப்ப வறுமைகளை, எப்படியெல்லாம் தட்பங்களால் தணிக்கலாம்? என்று, சிந்தித்த முத்தமிழ் காவலர் எம்.ஜி.ஆர். - .

அவற்றின் அரிய செயற்கரிய செயலாக எதிரொலித்த சேவைகள், அனேகமனேகம்! எனினும், காலத்தால் சிற்சில கல்வெட்டுக்களைப் போல, தேவைகளுக்கேற்ப ஆற்றியவர் புரட்சித் தலைவர்:

அதன் முதற்றொண்டாக, அமரகவி பாரதியின் ஏக்கமான தமிழ் இசையால் தயாபரனை வழிபடும் எண்ணத்திற்கு, எழிலுருவம் கொடுத்தார்!

ஏனென்றால், இசை இறைவழிபாட்டின் இதயமுருக்கிக் கலை; இறைவனிடம் மனிதனையும் - மனிதனிடம் இறையுணர்வையும் இசைய வைக்கும் கலை - இனங்க வைக்கும் கலை!

மக்கள் எல்லோரும் ஒன்று என்ற ஆன்ம நேய, ஒருமைப்பாட்டு உணர்வை; ஒழுங்கு முறைப்படுத்தும் ஒழுக்க ஒடுக்கக் கலை என்பதை, அந்த இசை அருமையை - இயல்பாகவே உணர்ந்தவர் எம்.ஜி.ஆர்.!