பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #og

அதற்கேற்ப, தேவார நால்வர்களின் பூவாரப் பண்களால், உளமுருக நாடோறும் ஒதி, ஒதி இறைவழிபாடு இயற்றி வந்த தமிழிசை ஒதுவார் தருமபுரம் சுவாமிநாதன் அவர்களை, புரட்சித் தலைவர் தமிழக அரசின் ஒதுவராக நியமித்தார்:

திங்கள்தோறும் ஆயிரம் ரூபாயை அரசு சார்பாக வழங்கி, தேவாரத் தமிழிசையால், இறைவனை வழிபடும் வழியை, முதன்முதலாக தமிழகத்தில் அரசு சார்பாக எம்.ஜி.ஆர். நாட்டினார்! தமிழிசை ஒதுவார் மரபுக்குரிய அரசு மரியாதைமாண்பு, அதனால் உருவானது! .

மானுடத்தைப் புகழ்ந்துபாடும் போக்கை மாய்த்தது நாயன்மார்! ஆழ்வார்கள் காலம்! அதாவது ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு! .

'ஏழிசையாய் இசைப் பயனாய், எங்கும் நிறை ஒலிமய மாய் ஒளிரும் இறைவனை, மருதமலை மாமணியே முருகா' என்று பாடிப் பாடி தமிழ் மண்ணை இசை வலம் வந்தவர் மதுரை சோமு அவர்கள்:

கனிவுடைய சுவையோடு, அவர் தமிழிசைப் பாடும் போது, கல்லாரும், கற்றாரும் கேட்டுக் களி தாளம் கொட்டுவர்: இசைக் கச்சேரி இடையே எழுந்து சிறுவர் நாட்டியமும் ஆடுவர்! ஒருமுறை இது யானை கவுனி அம்மன் விழாவிலே நடந்த சம்பவம்:

அத்தகைய ஆற்றல் பெற்ற இசை மேதையை, அரசவைத் தமிழ் இசைவாணராக நியமித்தார் எம்.ஜி.ஆர். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கி, இசை மேதைகட்கு அரசு மரியாதையை அளித்தார்.

மைசூர் மன்னரின் அரசவை இசைப் புலவர் ஜி.என். பாலசுப்பிரமணியம் என்ற இசை வித்தகர்!

ஏழிசை வாணி, கோகிலகான இசை வாணி என்று இன்று நம்மால் அழைக்கப்படும் ஏழிசை வித்தகி எம்.எஸ். சுப்பு லட்சுமியின் சகுந்தலை என்ற திரையோவியத்தில் நடித்தவர் அவர் அவரது மாணவியான எம்.எல். வசந்தகுமாரி, கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்ற வித்தகி: ‘.