பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it 2 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

எழுதுகின்ற என் பேனாவிற்கும் அவர் எழுத்திற்கும் ஏற்பட்ட மேடு பள்ளங்கள், மோதல்கள், வாக்குவாத வசைகள், வாழ்த்துதல்கள், நட்டலால் ஏற்பட்ட நெருக்கங்கள் எலாம் நீரிற் குமிழிகளாகி விட்டன! இன்று:

என்செய்ய இளமை, நீரலைகள் தான்ே! உடம்பு நீரெழுத்துக்கள் அல்லவா? அதனாலே வருந்தி யாது பயன் இந்த யாக்கைக்கு?

நான் 6.4.52 அன்று, சென்னை ஒற்றை வாடைக் கலையரங்கில் நடத்திய இலட்சிய ராணி என்ற நாடகத்திற்கு ஆறு பாடல்களை எழுதினார்! கலைவாணரைத் தலைமை வகிக்க அழைத்து வந்த கேண்மையின் வைரமவர்: போகட்டும்:

கல்வி கற்புடைய மனைவிக்குச் சமம்! மனைவியினால் பெறும் இனிய இன்ப உணர்வுகளே கவிதைகள்:

ஏறுபோல் பீடு நடைபோடும் வீறுபெற வைப்பது அந்த மனைவியின் கற்பு: அறம், அன்பு!

சொல்வன்மை, மனச்சான்று, எதிர்கால நோக்கு, சிந்தனைச் செல்வம், கற்பனை வளம் என்ற கவிப்புலனுணர்வுகள் ஒரு கவிஞனிடம் அமைதல் வேண்டும்.

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஒண்டொடி உணர்வுகளோடு, கவிஞன் கவிப்புல உணர்வுகளும் ஒன்றி.டின், அவன் கவிதை வானிலே மரணமிலாப் பெருவாழ்வு வாழும்! .

இது ஒரு சிலரால் மட்டுமே இயலக்கூடிய கவிதைச் சித்து விளையாட்டாகும்! அவர்களிலே, ஒருவர் கவி மன்னர் கண்ணதாசன்! பத்தாயிரம் பாடல்களை எழுதிய திரையுலகத் தற்கால வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளாவார்!

இத்தகைய கவிதைச் சிற்பிக்கும் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் இடையே, சினிமா, அரசியல் கருத்து வேறு பாடுகள், பற்பல துறைகளில் முரண்பாடுகள் தோன்றியதுண்டு!