பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி +13

இருவரும் இருவேறு அரசியலரங்கப் பங்காளிகளாயினர்! ஆனால், அவரவர் தொழிலில் அந்தப் பகை வாசனை மூக்கை நீட்டும்போது,பொன்மனச் செம்மல் புலவர் புலமைப்பித்தன், காவியக் கவிஞர் வாலி கவிஞர். நா. காமராசன், கவிஞர் முத்துலிங்கம், ஆர்.கே. சண்முகம், ஒம் சக்தி ஜகதீசன் ஏ.கே. வில்வம் என்ற திரைமாற்றங்களை அமைத்துக் கொண்டவர்;

"புரட்சித் தலைவர் தமிழக முதல்வரானார்! 'பகைவ னுக்கும் அருள்வாய் நெஞ்சே, வைதாரையும் வாழ வைக்கும் தமிழ்' என்ற தெய்வத் தமிழ்ப் பண்பாட்டை, சிரம் பழுத்த அவரது சிந்தனையின் சிம்மாசனத்திலே நிறுத்தினார்.

அறம் பழுத்த அவருடைய செயல்கள், அறிஞர் அண்ணாவின், 'வசவாளர்கள் வாழ்க’, எங்கிருந்தாலும் வாழ்க! என்ற தத்துவப் பண்பாட்டிற்குச் சான்றாக, திறம் பழுத்த அரசு ஆனைகளால் பிறந்தன: அவற்றுள் ஒன்றுதான்் கவியரசு கண்ணதாசன் தமிழக அரசவைக் கவிஞரென முகிழ்த்த உத்திரவு!

தமிழ்ஞான சம்பந்தருக்கு ஞானப்பால் தந்து ஆட்கொண் டதைப் போல, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அடிமை ஒலை காட்டி அருளுட்டியைதப் போல, நாவுக்கரசு பெருமானுக்கு சூலை நோயை ஈந்து மருள் நீக்கியதைப் போல, மாணிக்க வாசகனாருக்கு சிவஞான போதம் நூலைக் காட்டி, தெய்வீக அருளிற்குச் சான்றளித்ததைப் போல, கவிஞர் கோமான் கண்ணதாசனைக் கேளாமலே; அவரிடம் ஏதும் முன்கூட்டி அறிவிக்காமலே, கவிஞர் கண்ணதாசன் சாகும் வரையிலும், தமிழக அரசவைக் கவிஞர்' என்ற அரசு மரியாதை ஆசனத்தைத் திடீரென அளித்து ஆட்கொண்டார் எம்.ஜி.ஆர்.:

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தபோது கவியரசு கண்ணதாசன் அவர்கள், அமெரிக்கத் தமிழ்ச் சங்கங் களின் அழைப்பை ஏற்றுக் கொண்டு தமிழ் தொண்டாற் றிடவும், உடல் நலம் பேனவும் அமெரிக்கா சென்றார்:

கரந்தைத் தமிழ்க் கல்லூரியின் சிற்பிகளில் ஒருவரான தஞ்சை தண்டமிழர் தமிழவேள் உமா மகேஸ்வரம் பிள்ளை