பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி . $45

செங்கோட்டை எஸ். சுப்பிரமணிய பிள்ளை அவர்களை, ரத்தினச் சுருக்கமாக, எஸ்.எஸ். பிள்ளை என்பார்கள்: தமிழாசிரியராகப் பணியாற்றிய பட்டதாரி அவர் கணிதத் துறையிலும் பட்டம் பெற்ற மேதை மாநிலக் கல்லூரியின் கணித பேராரசிரியராகவும், பணிபுரிந்த பொறுமையளர் - வறுமையாளர்: கணிதமேதை ராமானுஜத்தை விடத் திறமையாளர்

உலக அறிவியல் மேதை ஐன்ஸ்டினுக்கு முன்னோடி 韃。鑽蕊 இருந்த பிரான்ஸ் நாட்டு வானியல் வித்தகர் ஒருவருடைய கணக்குச் சூத்திரங்களுக்கு விடை விளக்கம் தரவேண்டும் என்று, அந்நாட்டு அரசு உலகுக்கு ஒர் அறிவிப்பு விடுத்திருந்தது:

கணிதத்துறை வித்தகரான எஸ்.எஸ். பிள்ளை, பிரான்ஸ் நாட்டு அறிவியல் மேதையின் கணக்குச் சூத்திரங்களுக்கான விடை.விளக்கங்களை எழுதி, அமெரிக்காவிலே உள்ள பிரின்ஸ் யூனிவர்சிட்டிக்கு அனுப்பினார்!

அந்த கணிதவியல் வழி விளக்கங்களைக் கண்ட அமெரிக்கா பல்கலைக் கழகம், எஸ்.எஸ். பிள்ளையின் கணக்கியில் திறனையும், சூத்திர அறிவின் கூர்மையினையும், ஆழ்ந்த புலமையினையும் பார்த்து, வியந்து, பிரெஞ்சு விஞ்ஞான மேதைக்கு உதவியாளராக இருக்கத் தகுதி யுடையவர் பிள்ளை என்ற, நற்சான்றிதழோடும், உடனடியாக அவரை ஃபிரான்சுக்கு அனுப்பிடல் வேண்டும் பரிந்துரைத்தது:

ஏனென்றால், ஃபிரான்ஸ் கணித மேதையின் சூத்திரங் களுக்குரிய விடை விளக்கங்களுக்கு யோசனை கூறிட ஆய்வு புரிந்திட, அப்போது நமது பிள்ளையைப் போல ஒரு கணித மேதை உலக அரங்கில் தென்படவில்லை. அதனால், அவரை அமெரிக்கப் பல்கலைக் கழகம் பரிந்துரைத்தது:

தமிழ்நாட்டிலே உள்ள ஒவ்வொரு துறை மேதைகளும் அவரவர் அன்பளிப்புப் பிரிவாக பணமும் திரட்டிக் وسيا سميتة கொடுத்து கணித உதவியாளராக பிள்ளையை ஃபிரான்சு நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். -