பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†† B மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். சர்.ஏ.டி. பன்னிர் செல்வம் போல, நமது கணிதவியல் மேதை, தமிழியல் துறை வித்தகரான பிள்ளையும் கடலிலே விமானம் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தால், விமானம் எரிந்து விழுந்து செத்தார் - பாவம்: அவர் பிணம் கூட திரும்பவில்லை தமிழ்நாட்டிற்கு!

உலகப் புகழ்பெற்ற ஃபிரான்ஸ் அறிவியல் மேதைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த கணக்கியல் மேதை எஸ்.எஸ். பிள்ளை உதவியாளராகச் சென்றாரென்றால், அவருடை திறமை, புலமை, நுட்பம், ஆழ்ந்த நோக்கும், அறிவுக் கூர்மையும் எப்படி இருந்திருக்க வேண்டும்? சிந்திக்கப்பட வேண்டியவர் அல்லவா அவர்?

கணக்கியல் மேதை இராமானுஜத்தைப் பாராட்டும் உலகுதான்், பிள்ளையின் திறமையைப் பாராட்டி மகிழ, இப்படி ஒரு தமிழன் இருந்தான்் என்ற அவரின் மேதைமையை உலகுக்கு உணர்த்திடத் தவறி விட்டது: - -

அது போகட்டும், எந்த திராவிடராவது இத்தகைய ஒரு கணக்கியல் மேதை இருந்தார் என்பதை அறிவாரா? அவரைப் பற்றி சிந்தித்தனரா? பேசினரா? எழுதினரா? - பொருளாதார மேதை டாக்டர் ப. நடராஜன் ஒருவரைத் தவிர!

செங்கோட்டை நகராட்சி மட்டும், எஸ்.எஸ். பிள்ளை யின் பெயரை, எஸ்.எஸ். தெரு என்று ஒரு சிறிய சந்துக்கு அவர் பெயரை வைத்திருக்கிறது! ஆனால், கணக்கியல் மேதை இராமானுஜத்திற்கு மட்டும் வானளாவிய பாராட்டு, புகழ், இதுதான்் மனித இன உணர்வோ?

இது எவ்வாறுள்ளது என்றால், நெல்லை நகராட்சி உறுப்பினராக நீண்ட நாள் இருந்து, பொது மக்கள் பணியாற்றி யவர் கா. சுப்பிரமணியப் பிள்ளை. நேர்மையான வறுமையாளர்!

தமிழ்நாட்டிலே முதன் முதலாக முதல் மாணவராக Longhol_ff oooo soft (Master of Law) என்ற பட்டம் பெற்றவர்: