பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 117

அதனால், அவரை அறிவுடையார் எல்லாம் எம்.எல். பிள்ளை என்றே அழைத்துப் பெருமை பட்டார்கள்.

அவருடை தந்தையார் பெயர் காந்திமதிநாத பிள்ளை: அவர் தமிழ்நாட்டிலேயே முதல் மாணவராக முதல் முறையாக பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றவர். அதனால் அவரைப் பி.ஏ. பிள்ளை என்று அறிஞர்கள் புகழ்ந்து போற்றினார்கள்.

எம்.எல். பிள்ளைதான்் கா.சு. பிள்ளை, காசு பிள்ளை தான்் எம்.எல்.பிள்ளை. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை தலைவராகப் கா.சு. பிள்ளை பணியாற்றிவர்: மாநிலக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணி புரிந்தவர்:

நோபல் பரிசு பெற்ற தாகூரின் சாந்திகேதனம் கல்விக் கோட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் புலமை பெற்ற மேதைகள் எழுதிய புத்தகத்திற்கென வழங்கிட ஆண்டுதோறும் பத்தாயிரம் ரூபாய் பரிசு ஒன்று வைக்கப்பட்டது!

எந்தத் துறையில் எவர் வெற்றி பெறுகின்றனரோ, அவரவர்கட்கு, அந்த பரிசு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு சாந்திநிகேதனத்தால் வெளியிடப்பட்டது.

srub. Ersö. 1 Psira»s sragstu i Principles of Criminology sisäp நூலுக்கு அந்த பரிசு கிடைத்தது! வங்காளிகள் எல்லாம் முட்டாள்களா? தமிழ்நாட்டுக்காரன் அவ்வளவு பெரிய புத்திசாலியா? என்ற காழ்ப்புப் போர் அங்கே நெருப்பானது:

சர்வதேச திரைப்பட விழா கல்கத்தாவிலே 10.01.9% அன்று நடைபெற்றதே... அதில், தமிழ்நாட்டு மார்லன் பிராண்டோவை சிறப்பு விருந்தினராக அழைப்பது என்று முடிவை அறிவித்து, நடிகர் திலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.

அந்த விழாவிற்கு, சிவாஜி கணேசன் அவர்களை வரவேண்டாம் என்று மத்திய அமைச்சகம் கூறிவிட்டது. மீண்டும் வங்காளத்தில் தமிழன் மீது பொறாமைப் போர்) தொடுக்கப்பட்டு, தமிழன் சிவாஜி கணேசன் அவமானப் படுத்தப்பட்டிருக்கிறார்: