பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். ஏன், சிவாஜி வரவேண்டாம் என்று போர் தொடுத்தார்கள் என்றால், சிவாஜியை விட மிருனாளினி சென் என்பவர் நன்றாக நடிப்பவராம்! அதனால், வேறு ஒரு நடிகரை அழைக்க வேண்டாம் என்ற அரசியல் அழுக்காறு தோள் தட்டி நின்றது: இறுதியாக வங்க இயக்குநரான தபன் சின்கா என்பவர் விழாவைத் துவக்கி வைக்கிறார்! எப்படி தேசிய ஒருமைப் பாட்டுணர்வு? -

11

3

அதனைப் போலவே கா.சு. பிள்ளையை எதிர்த்து வங்காளிகள் அப்போது, போர் தொடுத்தார்கள்: எம்.எல். பிள்ளை அங்கே பணியாற்றிய வேலையைத் துக்கி எறிந்து விட்டு, பலத்த போரட்டங்களுக்கிடையே பரிசைப் பெற்றுத் திரும்பினார்!

பிற மாநில அழுக்காறு அறிவுக்குப் பயந்து சாந்திநிகே தனம் பரிசு, அந்த ஆண்டோடு நிறுத்தப்பட்டு விட்டது! எம்.எல்.பிள்ளை அன்று பரிசு பெற்ற நூல்தான்் இன்றுவரை எம்.எல். சட்டப்படிப்பிற்குரிய அரிச்சுவடியாக உள்ளது.

ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், இவ்வளவு பெரிய அறிவாற்றலாளரான கா.சு. பிள்ளைக்கு, நெல்லை நகர மக்களே தக்க மரியாதை காட்டாமல், நெல்லை சந்திப்புக்கு கீழே உள்ள அண்ணா மேம்பாலத்தினருகே, ஒரு மூலையில், எல்லாரும் அசுத்தம் புரியும் இடத்தில், எவர் கண்ணுக்கும் புலப்படாத ஒர் இடத்தில் மார்பளவுகூட அல்ல, தலையளவு சிலை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது - என்பதற்காகவேதான்்! - இது எவ்வளவு பெரிய அவமானம் பார்த்தீர்களா?

ஒருவர் அறிவாளியாக மட்டும் இருந்தால் போதாது. அடியாட்கள் கூட்டமும் இருந்தால்தான்் அவர் சகலகலா அறிஞராக மதிக்கப்படுவார் - சில காலத்திற்கு! இல்லாவிட்டால், அவர் சிலை மீது நாயும் சிறு நீர் கழிக்கும்! மனித இன நாயும் சிலையருகே சிறுநீர் பெய்யும் மலமும் கழிக்கும்! அவ்வளவு மோசமான இடங்களில் அறிஞர் குல திலகங்களின் நினைவுச் சின்னங்கள் நிறுத்தப்படுகின்றன!