பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

அறிஞர் அண்ணா அவர்களால் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த நடிகை என்று பாராட்டப்பட்டவர் திருமதி, பி. பானுமதி அவர்கள்:

"வசந்த கோகிலம் போல அற்புதமாகப் பாடிடும் இசை வாணி பானுமதி, தெனுகு சினிமாத் துறையில் அவர் பாடிய பாவுரமா என்ற பாடல் - ஆந்திர தமிழக எல்லை சூழ் நிலப் பரப்பு களில் எல்லாம் எதிரொலித்து மக்களை மயங்க வைத்ததும் உண்டு. X

திரைத் துறையில் ஆடியும் - பாடியும் நடித்தும் புகழ் பெற்று வந்த திராவிட முத்தமிழ் கலைஞ பானுமதி புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருடன் சில படங்களிலே நடித்த பண்பட்ட நடிகை, எழுத்தாளி, இசைவாணி, கதாசிரியை, இயக்குநி, பரணி ஸ்டுடியோ உரிமையாளி, படத் தயாரிப்பாளி ஆவார். பானுமதி: .

மக்கள் திலகம் தமிழக முதல்வரானவுடன் தமிழக அரசால் நடத்தப்படும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிக்கு இயக்குதியாக நியமித்தார் எம்.ஜி.ஆர் - நடிகை பானுமதி அவர்களை!

புரட்சித் தலைவருடன் யார் யார் கலைத் துறையில் ஈடுபட்டார்களோ, அவரை நம்பி வாழ்ந்தார்களோ நட்பாடினார் களோ அவர்களை எல்லாம் மக்கள் திலகம் மறந்தாரில்லை.

அவரவர் திறமைகளுக்கேற்ப வலிய வலிய அரசுப் பதவிகளை அளித்து, ஒவ்வொருவருடைய தனித்தனி ஆற்றல்களுக்குரிய அரசு அங்கீகாரத்தைக் கொடுத்தார்: மதிப்பும் மரியாதையும் தமிழ்நாடு அவர்களுக்கு ஈந்தது!.

மக்கள் திலகம், கை, உடுக்கை மட்டுமல்ல, தடக்கை! அதாவது, விசாலமான கை, தாராளமான கை வள்ளண்மை கை மனமும் கோடாத மனம்!

தாம்ரை இலையைத் தாங்கி நிற்க ஆதாரமாக இருப்பது தண்ணிர் - தழைக்கவும் வைக்கின்றது! ஆனால், அந்த இலை மீது ஒட்டுவதில்லை தண்ணtர். -