பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி i23

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன்னை நம்பிய எந்த ஒரு தனி மனிதனின் வாழ்வையும், தண்ணிர் போலத் தாங்கி நிற்கும் தத்துவமாகக் காணப்பட்டார்!

தன்னால், வளமோ, பலமோ பெற்றிட்ட மனிதனின் புகழாலோ, செல்வத்தாலோ தாங்கப்பட்டவர் அல்லர் எம்.ஜி.ஆர்.

தாமரையில் பட்ட தண்ணிர் ஒட்டாது; இலையில்! வேண்டுமானால் உருண்டு, புரண்டு, திரண்டு ஒளி ஏற்றிக் காட்டி, பளபளத்துத் தவழும்!

புரட்சித் தலைவரிடம் பயன் பெற்ற பண்பாளர்களிலே பலர், முத்து போன்று தாம் பெற்ற வாழ்வை, அற ஒழுங்கு முறையோடு நடத்துகின்றார்களா என்பதைக் கண்காணிக்கும் சிந்தனைகளாகக் காட்சியளிப்பார் எம்.ஜி.ஆர்.

மறைந்திருந்தாவது அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களுக்கு மாண்பூட்டி மகிழ்வார்.

திருக்குறள் உலக மக்களின் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த உலகப் பேரறத் தமிழ்மறை, நூல்: எந்நாட்டவர்க்கும் எக் காலத்திற்கும் பொது மறையாய் விளங்கும் தகுதி பெற்ற நூல்:

இராமாயணம், திருக்குறளுக்கு இலக்கியமாகத் திகழும் எண்ணற்ற நூற்களிலே ஒன்று! குறிப்பாகக் கூறுவதான்ால், அதன் ஒவ்வொரு பாத்திரமும் 'அன்புடைமைக்குச் சான்றாக நடமாடுவதைக் காணலாம்! ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை இராமபிரான் ஒம்பும் நூல்:

கந்த புராணம், திருக்குறளின் செய்நன்றி அறிதல்' என்ற அதிகாரத்தின் மீது அடிப்படையாக அமைந்த புராண நூல்:

மகாபாரதம், ஒருத்திக்கு பல கணவர் என்ற அவ்வக்கால நாகரிக வளர்ச்சியை அடையாளம் காட்டினாலும், அதன் ஒவ்வொரு பாத்திரமும் திருக்குறளின் அருளுடைமை'யைப் பற்றிப் பேசும் நூல்!

அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவதும், ஊழ்வினை உருத்து