பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி i25

என்றெண்ணி, அவரைத் தம் கட்சி வேட்பாளராகத் திண்டிவனம் தொகுதியிலே நிறுத்தினார்! -

காலம் செய்த அரசியல் அலங்கோலம், திருக்குறளார் நாடாளுமன்றம் போகும் வாய்ப்பை இழந்ததால், தமிழக முதலமைச்சரான புரட்சித் தலைவர், திருக்குறள்நெறி பரப்பும் மையம் என்ற புதியதோர் பிரிவை, அரசு சார்பாக உருவாக்கி; திருக்குறளார் வீ. முனசாமி அவர்களை இயக்குநராக நியமித்துப் பெருமைபடுத்தினார்!

தமிழக அமைச்சரவை எதுவும், திருக்குறளுக்குச் செய் யாத தொண்டு, அதற்கென ஒர் அமைப்பை நிறுவிய செயல்: அதை மக்கள் திலகம், திருவள்ளுவ பெருமானுக்குரிய தொண் டாகக் கருதி அமைத்தார். குறளாருக்கு மேலும் பெருமையூட்டினார்: . சென்னை, வள்ளுவர் கோட்டத்திலே ஒரு விழா முதல்வர் எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் விழா தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் தமிழமுதை விருந்தாகப் படைத்திட வந்திருந்தார்.

ஆன்மீக உதயவானிலே சைவ தத்துவ நிலவாகப் பவனி வரும் அடிகளார், விழாவிலே சொல்லேருழவம் புரிந்தார்.

'பொய்யா மொழியாய் ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களிடையே பொலிந்து கொண்டு வரும் முப்பால் நூல், இந்திய தேசிய நூலாக்கப்பட வேண்டும்' என்ற, தமிழரின் மான வேட்கையை முதலமைச்சர் முன்பு அவர் முழக்கமிட்டார்.

தமிழர் கருத்துக்களுக்கும், அறநெறிகளுக்கும் கருவூல மாய் நடமாடி வந்த பரங்கிமலை பாரி, அடிகளாரின் ஆசை வேட்கையின் உள்ளுணர்வைப் புரிந்தார் எழுந்தார் பேசிட:

- விழா வரங்கில் ஒரே கையொலி இடி முழக்கம்! மகிழ்ச்சி ஆரவாரம்! என்ன பேசப் போகிறாரோ எம்.ஜி.ஆர் என்று!

திருக்குறள் உலகப் பொதுமறை: உணருகிறேன் அடிகளாரின் உட்கருத்து உணர்ச்சியை! ஆனால், உலகத்திற் காக வாதாடிடும் சிறப்பும் பொறுப்பும் என்னிடம் இல்லையே!