பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#28 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

'இந்த திட்டம் வெற்றி பெற, நானும் எனது மனைவி ஜானகியும் துணி ஏந்திப் பிச்சை எடுத்தாவது வெற்றிப் பெறச் செய்வோமே தவிர, நிறுத்த மாட்டோம்' என்று எதிர்குரல் கொடுத்தபடியே, தான்் நினைத்ததைச் செய்து முடித்தவர் மக்கள் திலகம்!

இவை மட்டுமா? இந்தத் திட்டத்தால் சில ஆயிரம் பேருக்கு வேலையும் கிடைத்தன. அவர்களும் தொழிற்சங்கம் கண்டு உரிமைக் குரல் எழுப்பும் நிலையும் உருவாகிவிட்டது! தமிழக வேலையில்லாதத் திண்டாட்டத்தைப் போக்கிட கடுகு அளவாது பயன்பட்டதல்லவா இந்த திட்டம்?

சிறு குழந்தைகளைப் பாதுகாக்கப் பால்வாடி, பெற்றோர் வேலைக்குப் போனால் பிள்ளைகளைப் பேன; சிறு குழுந்தைகள் விடுதி,

ஒய்வூதியம் பெறுபவர்கள், பென்ஷன் அலுவலகம் தேடி, ஒடி, நாய் போலக் காத்திருந்த இழி நிலையை ஒழித்து, அவரவர் வீடு தேடி, தபாலில் பணம் பெறும் மனிதாபிமான உதவியைச் செய்தார்!

விதவைகளுக்கும், வயதான் முதியோர்களுக்கும் உணவு, ஊதியம், ஆண்டுக்கு இருமுறை ஆடைகள் வழங்கல், ரேஷனில் இலவச அரிசியைக் கொடுத்தல், படித்தப் பட்ட தாரிகள் வேலையில்லாமலிருந்தால் பண உதவி அளித்தல்!

அரசு ஊழியர்கள் இறந்தபோது - வழங்கப்படும் தொகையை உயர்த்துதல்! இவையொத்த எண்ணற்ற உதவிகளைச் செய்தார் எம்.ஜி.ஆர். என்ற மனிதாபிமானி.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக இருப தாயிரம் ரூபாயை வழங்கினார்:

பாஸ்கெட் பந்தாட்டக் குழுவினரின் கலையை வளர்க்கப் பத்தாயிரம் ரூபாயைத் தந்தார்!

தீயால் பாதிக்கப்பட்ட சர்க்கஸ் கம்பெனிக்கு ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாயைக் கொடுத்து பேருதவி புரிந்தார்!