பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி $23

வலது கையால் கொடுப்பது இடது கைக்குக்கூடத் தெரியக்கூடாது என்ற இலக்கணத்திற்கேற்ப, அவர் செய்த உதவிகளை நாடு அறிய முடியவில்லை. அவை ஏராளம்: எழுதிடின் பெருகும்!

மழையிலே நனைந்து வண்டி இழுப்பதைப் பார்த்தார் மக்கள் திலகம்; மனம் குமைந்தார்:

அவர்களும் மனிதர்கள்தான்ே! ஆளை அமர்த்தி ஆள் இழுக்கும் பரிதாப நிலையில், மழையில் நனைந்து உடலைக் கெடுத்துக் கொள்கிறார்களே என்ற மனிதாபிமானத்தால் 'ரிக்ஷாக்காரன்’ என்ற படத்தில்ே நடித்தபோது, ஆறாயிரம் ரிக்ஷா இழுக்கும் தோழர்களுக்கு மழைக்கோட்டுகளை வழங்கினார்; ஏழைகளின் ஏந்தல் எம்.ஜி.ஆர்.

இதற்கு முன்பு, இப்படி ரிக்ஷாக்காரர்கள்மீது அன்பு செலுத்திய, அக்கறை காட்டிய மனிதன் யாராவது வரலாற்றில் உண்டா?

வள்ளல் பாரி வேண்டுமானால், மழையிலே நனைந்து படர முடியாமல் தவித்த முல்லைக் கொடிக்குத் தனது தேரை ஈந்தான்் என்று உதாரணம் உரைக்கலாம்! அது இலக்கியம், ரசிக்கலாம்! மனிதநேயமும் கூட!

ஆனால், படித்தவர்களும் - அலுவலகப் பணியாளர் களும் கம்பீரகமாக மழைக்கோட்டு அணிந்து போவதைப் போல, ரிக்ஷாக்காரர்களும் கம்பீரமாக போனார்களே!

இல்லாமையால் தவிக்கின்ற ஏழைகளுக்குக் குறிப்பறிந்து, தன்னாலியன்றதைச் செய்வதுதான்ே ஈகை?

‘விவசாயி' என்ற படத்தில் நடித்த எம்.ஜி.ஆர். ஆட்சி பீடமேறியதும் விவசாயிகளுக்குரிய திட்டங்களையும் திட்டி, நடைமுறைப்படுத்தினார்! விவசாயிகளைக் கேட்டால் அவை

புரியும்!