பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*3鲁 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். 'மீனவ நண்பன்', 'படகோட்டி' போன்ற படங்களிலே நடித்த எம்.ஜி.ஆர். அவர்கள், மீனவ சமுதாயத்திற்குரிய நல்ல பல உதவிகளையும் ஆற்றினார்! கடலோரப் பணியாளர்களைப் பேட்டி கண்டால் அவை நன்கு தெரியும்:

ஏழைகள் மட்டுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மீது பற்று காட்டவில்லை: பால் மனம் மாறாத சிறுவர்கள் ஏராளமாக அன்பு கொண்டிருந்தார்கள் ஏன்?

கலை உலகத்திலே புரட்சித் தலைவரை, சிறார்கள் சாதாரன ஒரு நடிகனைப் போல காணவில்லை!

வாளேந்தும் வீரனாக, கோலேந்தும் கலைஞனாக, குத்துச்சண்டை தீரனாக, மாடுபிடு சண்டைபோடும் சங்ககால மறவனாக, புலியோடு பொருதும் கான வேடனாகக் கண்டு களி கொண்டார்கள்!

மேலை நாடுகளிலே எரால்ஃபிளைன், டக்ளஸ் பர்பாங்ஸ் போன்ற நடிகர்கள் வீர விளையாட்டுப் படங்களைத் தவிர, மற்ற படங்களில் நடிப்பதில்லை.

வாட் சண்டையில் ஆங்கிலேயர்கள் தங்களது திறனை எப்படிக் காட்டுவார்கள் என்பதை உலகுக்குக் காட்டும் பொழுதெல்லாம் ஆங்கில நாட்டு மக்கள் அவர்களை வீரத்தின் சின்னங்களாகவே கருதி வந்தார்கள்.

முத்து கடல் மொய்த்த, முத்தமிழ் தொனி முழுங்க, நித்தம் இளமையோடு நெடுநாட்கள் இருந்து வரும் தமிழகத்தில் நிலைத்த இரண்டு தத்துவங்கள் உண்டு!

ஒன்று வீரம், மற்றொன்று காதல்! அகம், புறம் என்று அவற்றைக் கூறும் சங்க இலக்கியம்:

ه معهم

அகநானூற்றில் வளையல் ஒலி கேட்கும்! புறநானுற்றில் வாட்கள் ஒலி மோதும்! -

புரட்சி நடிகர் அவர்கள், புறத்திலிருந்து வாளை உருவி, தமிழகத்தின் வீரத்திற்குச் சின்னமாகக் கலை உலகில் நடமாடி வந்தவர்: