பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

'கோலெடுத்து விளையாடதே தம்பி’ என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறினால், அவரது பேரனோ, ஆடக் கூடாத கோலெடுத்து அவர் கையிலே தந்து, 'வில் கட்டித் தா தாத்தா!' என்றான்.

நெறித்த பார்வையும், நெடுமலைத் தோளும், விரிந்த மார்பும் - விளங்கிய அறிவும், தமிழ் சிரிக்கும் சிந்தனையும் கொண்ட பாவேந்தர் அவர்கள், கோலை வில்லாக்கி - அம்பாக மற்றொன்றையும் கொடுத்துப் போருக்குப் போடா பேரா என்றார்! கவிஞர் வாழ்க்கையில் இது நடந்ததாக அவரே ஓரிடத்தில் கூறினார்.

தமிழகக் கவிஞனுக்கு இந்த உணர்ச்சிதான்் தோன்றும். ஆனால், அந்தப் பேரப் பிள்ளையைப் போல எத்தனையோ பிள்ளைகள், எம்.ஜி.ஆர். வாட் புரட்சியால் வீரர்களாக்கப்படும் வீரக் காட்சிகளை, வீட்டுக்கு வீடு ஒவ்வொரு குடும்பமும் பார்த்துப் பார்த்து வியந்தது!

கொள்கை ரீதியாகக் கலை வளர வேண்டும் என்ற தலையாய நோக்குடன், தன்னுடைய வீர வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டவர் வீரத்தின் விளை நிலமான எம்.ஜி.ஆர். .

இதைப் புரியாதவர்கள், அவரை 'அட்டைக் கத்தி வீரர்' என்று கேலி பேசினர். பாவம்!

துர்ய பழக்க வழக்கங்களால் அழகேறிய அவரது திருவுருவம், இளமையுடன் கண்ணாமூச்சி ஆடியது.

அதனால்தான்், அமெரிக்க அறுவை சிகிச்சையில் அவரது உடலைப் பிளந்த மருத்துவர்கள், 'இதென்ன இருபத்தைந்து வாலிபனின் உடற்கூறுகளைப் போல இயங்குகின்றதே. அவரது, உடலின் இயந்திரங்கள்' என்று ஆச்சரியப்பட்டனர்! அறிக்கையும் விடுத்தனர்! -

'உண்மையான காதல் உள்ளம் கொண்ட ஒருவன், அவனோடு தொடர்புள்ள நாட்டு மக்கள் மத்தியில் வீர உலா