பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #35

புனலற்ற ஆறு, அனலற்ற பகல் - வேர் பாயா மரம் போலாவர் - கொள்கையின் சிறகு விரிக்காமல், கலைவானிலே பறக்க நினைக்கும் கலைஞர்கள் அனைவரும்.

நாடகப் பெரும் புலவரான சேக்ஷ்பியர், வெறும் மனித உணர்ச்சிகளை மட்டும் கதாபாத்திரங்களாக உருவாக்காமல், தேவையான இடங்களில், தான்் விரும்பியேற்ற கொள்கை களையும், உணர்ச்சிகளையும் அந்த கதாபத்திரங்கள் வாயிலாக கூறியுள்ளார் வாதாடியுள்ளார்:

கலைஞன் ஒருவனுக்கே இந்த முறை தேவைப்படும் போது, நடிகர்களுக்கு மட்டும் தேவையில்லை என்று கூறுவானேன்? நடிகனும் கலைஞன்தான்ே!

வைரம் பாய்ந்த கொள்கையை நாட்டு மக்களிடம் படைத்து, அவர்களது மனப்பூங்காவில் விளையாடும் தென்றலாகக் கலைஞன் மாறுவானேயோனால், நாட்டு மக்கள் ரசிகர்கள் என்ற நிலையில் மட்டும் பின் தொடராமல், கொள்கை விளக்கம் கேட்கும் தொண்டர்களாகவும் அக்கலைஞர்களைப் பொது மக்கள் பின்பற்றுவார்கள்:

தமிழகத்தில் நடந்ததென்ன? புரட்சித் தலைவர் அப்படி நடந்து காட்டியதால்தான்் தமிழக மக்களாகிய நாங்கள், அது ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, எம்.ஜி.ஆரைப் பின்பற்றிய ஈக்களென மொய்த்தோமே! இந்தக் காட்சிகள் தெரியாதா நாட்டுக்கும் மற்றவர்களுக்கும்:

புரட்சி நடிகரைக் கட்சியை விட்டு சிலர் துக்கி எறிந்தபோது, ஏறக்குறைய ஒரு மாத காலம் தமிழகத்தையே ஆடாமல், அசையாமல் பொது மக்களாகிய நாங்கள் ஸ்தம்பிக்க வைத்தோமே - அதை மறந்து விட்டீர்களா?

தமிழக அமைச்சர்கள் எல்லாம் அச்சம் தெளிந்து - வெளியே வந்து, அவரவர் வாயைத் திறக்க எத்தனையோ மாதங்களாயிற்று மறுக்க முடியுமா இதை?

புரட்சி நடிகரை நாங்கள் புரட்சித் தலைவராக நடமாட விட்டு, எல்லா சக்திகளையும் தவிடு பொடிகளாக்கி, பன்னி