பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#35 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

ரெண்டு ஆண்டு காலமாகக் கோட்டைச் சிம்மாசனத்தில் உட்கார வைத்துக் களித்தோமே, எதனால்? மறக்க முடியுமா? தமிழக வரலாற்றால் - இந்த சம்பவங்களை?

தமிழக மக்களின் பெரும்பான்மையோர் மத்தியில் தவழ்ந்து, தழைத்து வருகின்ற அறிஞர் அண்ணாவின் கொள் கை, எங்கள் மனதிலே வேரூன்ற வேண்டும் என்பதற்காக, புரட்சி தலைவர் தன்னுடைய தொழிற் கலையை பயன்ப

டுத்தினார்!

அந்த நிலையில் நாங்கள் எம்.ஜி.ஆரை நோக்கும்போது, அவரது பண்புகள் எல்லாம் அரசியல் சடங்குகளாக அமை யாமல் சத்திய சரித்திரச் சம்பவங்களாக நடமாடியதைக் கண்டோம்1

அதனால், தமிழகக் கலை உலக அரசியல், சமுதாய சேவைகளின் தூண்களிலே ஒன்றாக மக்கள் திலகத்தை நாங்கள் மதித்ததால் அவரைப் பின்பற்றினோம்!

ஒப்பனையின் ஒத்துழைப்பால், வெறும் லாபக் கணக்கு போட்ட கலைஞராக மட்டும் எம்.ஜி.ஆர். இருந்திருப்பாரேயா னால், அவர் அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்தபோதே அவமானப்படுத்தியிருப்போம்! அடிமரம் நெடுமரமாக வீழ்த்தி இருப்போம்! - திருவையாற்று சட்டமன்றத் தொகுதியிலே ஜாமீன் தொகை இழந்த நடிகர் திலகத்தைப் போல!

மனம் விரும்பி ஏற்றுக் கொண்ட அவருடைய கொள்கைக்கு ஒரு துளி இடையூறு எங்களால் நேர்ந்தாலும், தாங்க முடியாதது புரட்சித் தலைவருடைய உள்ளம்.

அதனால்தான்், அவர் நடித்த படங்களிலே எல்லாம் மக்களின் வாழ்க்கைக் கொள்கையே முதலிடம் பெற்றது! கலையைத் தனது மனிதநேயக் கொள்கைக்கு ஏவலாளியாகவே எம்.ஜி.ஆர். பயன்படுத்தினார்!

வெறும் நடிப்பை மட்டும் நம்பி, தனக்கென, ஒரு கொள்கை இல்லாமலேயே எவரும் நல்ல கலைஞனாகத் திகழ