பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 137

முடியும். ஆனால், அவர்கள் மக்கள் திலகமாக முடியாது. புரட்சித் தலைவராக முடியாது!

அவர்கள் சவத்திற்கு ராணுவம் தலை வணங்காது. இந்திய தேசிய கொடி அவர்கள் உடலைப் போர்த்தாது!

பிண ஊர்வலம் போகும் போது, இலட்சோட இலட்சம் மக்களாகிய நாங்களும் பிரதமரும், பிற முதலமைச்சர்களும், அமைச்சர்களும் பின் தொடர மாட்டோம்!

எனவே, தனக்கென ஓர் இலட்சியத்தை வகுத்துக் கொண்டு : அந்த விஞ்ஞான ரீதியான கொள்கைகட்கு தனது நினைப்பு, நேரம், உழைப்பு, அத்தனையும் கலை உருவில் வழங்குகின்ற எந்த கலைஞனும், மக்கள் திலகமாக முடியும் . இதனை எவரும் மறுக்க முடியாது என்பதற்குரிய சான்றோராக, விளங்கியவர் எம்.ஜி.ஆர். என்றால் மிகையாகா.

சமுதாய சீர்த்திருத்தக் கொள்கைகளை மட்டுமே, திரையுலகில் கூறி வந்த கலைவாணர், நகைச்சுவைக் கோமா னாக மறைந்த பிறகு, எத்தனையோ, கலைஞர்கள் திரைவானில் பறந்து பார்த்தார்கள்!

அவர்கள் நடிக்கும்போது மட்டும் மக்களை சிரிக்க வைத்தார்கள். சமுதாயத்தைச் சிந்திக்க வைக்க முடிந்ததா? அதற்கு தனி அறிவு தேவை! சமுதாய உணர்ச்சிப் பிடிப்பும் வேண்டும். -

ஒரு நடிகனுக்கு நிறை புகழைத் தருவது, மக்கள் சேவை ஒன்று மட்டும்தான்்! எந்த மக்களிடம் இருந்து அவன் பல இலட்சங்களைப் பணமாகப் பெறுகின்றானோ, அந்த மக்கள் வாழ்க்கை அவதிகட்கு ஆளாகும்போது, வாரி வழங்க வேண்டியது அவனது கடமை! நியாயம்! அறமுமாகும்:

அரசியல்வாதி மட்டும் இதனைச் செய்ய வேண்டும்

என்பதல்ல! கலைஞனும்தான்் இந்த மனிதாபிமான விதியைச் செய்தாக வேண்டும்!