பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி $45.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய வானுறையும் தெய்வத்தின் மானிடம், முதலமைச்சராகக் கோட்டைக்குப் போவதற்குப் பதிலாக, முதலமைச்சராகக் கோட்டைக்கு வரும்போது அவர் ஏறி வந்த கார் சங்கநாதம் எழுப்புமே, அதற்கொப்ப, சமாதி நோக்கிச் செல்லுகின்றதோ எம்.ஜி.ஆர். திருவுருவமென்று, மக்கள் கதறியழும் ஒசையோடு மரீனா கடலோசையும் சேர்ந்த காற்று, பெருத்த சோகவோசையை எழுப்பியபடியே இருந்தது!

அறிஞர் அண்ணா அவர்களின் பாதச் சுவடுகள் பிறழாமல் அதன் மேல் நடந்த நன்றியின் நன்மக்கட் திரள்கள் நடுரோடுகளில் வேதனை சூழ, சோக நடை நடந்தபடியே நகர்ந்து வந்தன!

சந்தனப் பெட்டியிலே உறங்கும் நமது சந்ததியின் நாயகனான அறிஞர் அண்ணா சதுக்கத்திற்கு அருகே, மீண்டும் ஒரு சந்தன பெட்டி போகின்றதே என்ற வேக்காட்டு ஒல நெஞ்சங்களோடு, அடிதடி நடக்குமளவிற்கு பாசத் துடிப்பை, சோகப் பதைபதைப்பாக்கி, பிறந்த குழந்தை பீறிட்டழும் முதல் அழுகைக் குரலோசையை மீறிய, மயான அழுகை ஒசையோடு, புரட்சிச் தலைவர் புதைகுழியருகே மோதி மோதி நெருங்கி விட்டோம்.

'மலையாளி - மலையாளி' என்று எம்.ஜி.ஆரை, வசைபாடிய மாபாவிகளின் புத்திக்கு சொரனை வருமாறு, தமிழ் மக்களுக்காகவே தன் உடல், பொருள், ஆவி மூன்ற்ையும் தந்து, அரசியலில் அழுக்காற்றை எதிர்த்து அதன் இடுப்பை முறித்து, ஆயுள் முழுவதும் போராடி, நல்லாட்சி நடத்திய செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர். என்ற முன்றெழுத்து மன்னாடி யார் மரபுப் பிணம், சந்தனப் பெட்டியோடு, தமிழ் பண்பாட்டிற்கேற்ப மண்ணில் அடக்கம் செய்யப்பட்டது:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்ற எழிற்கோவே: