பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

தமிழ்நாட்டு மக்களுக்காக இரவு பகலாய் உழைத்த தண்டமிழ்ப் பாரியே! ... " -

பொது மக்களாகிய நாங்கள் மானத்தோடு வாழ வழிகாட்டு என்று. புதைகுழி இறங்கும் அவரின் பூத உடலைப் பார்த்து நாங்கள் வாய்விட்டு கடைசி முறையாகக் கதற ஆரம்பித்தோம்! -

கடலலைகளில் புகுந்துவிட்ட காற்றும் சற்று வேகத்தைக் காட்டவே கடலும் தன் பெண்ணைலைகளைச் சேர்த்துக் கொண்டு, ஒ, ஓவென ஒசையிட்டு, ஒலமிட்டு, ஒப்பாரி வைத்தது: -

"கைம்மாறு கருதாத கார்போல, எம் வாழ்க்கைக்கு கருணை காட்டிய தங்கத் தலைவா! நீ மழை போல வா! உண்ணிர் வழங்கி எம் வறுமைத் தாகத்தைத் தணிக்க வழி செய்!

தென்றலே காற்றாக வீசு! உயிர்க் காற்றாக எம் உடலிலே ஊடுருவு! அரசியல் அரங்கில் இந்த ஈன உடல் நாற்றம் பெற நன்றியுணர்வை நல்கு!

அண்ணா என்ற மூன்றெழுத்தின் வாரிசே! எம்.ஜி.ஆர். என்ற முத்தமிழே! - - -

"தமிழகத்திற்காக, தமிழ்ப் பெருமக்களுக்காக உழைத்த செந்தமிழ் வேளிர் மரபே.!

நீ வாழ்ந்தபோது உனக்காக, ஒரு சிறு நினைவுச்

சின்னம்கூட அமைத்துக் கொள்ளாத புகழ்த் துறவியே!”

புரட்சித் தலைவர் இறுதி ஊர்வலத்தில், பொது மக்க ளாகிய எமது நெஞ்சங்கள் மேற்கண்டவாறு புலம்பி ஒய்ந்தன! -

இழந்துவிட்ட சாக்ரடீசை மீண்டும் ஏதென்ஸ் நகர மக்கள் தேடுவதை போல்,