பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #47

சமணத்தைத் தோற்றுவித்த மகாவீரரின் அறநெறிகளை அவனி போற்றுவதுபோல;

பெளத்தத்தின் புனித நெறிகள், பிறந்தகத்தில் புகழ்படாவிட்டாலும், புகுந்த நாடுகளில் புகழ் மண் பூத்துப் புத்தரைத் தேடுவதைப் போல.

அழுது கொண்டே பிறக்கின்ற குழந்தை, சிரித்துக் கொண்டே சாகும் வரை, வாழ்க்கைத் தத்துவ அறநெறிகளைப் போதித்த வள்ளுவர் பெம்மானை நொடிக்கு நொடி சிந்தித்திடும் தமிழ் வையம்போல;

எங்கே எங்கள் இயேசு நாதர், எங்கே எங்கள் இயேசு நாதர் என்று இன்றும் தேடிக் கொண்டிருககும் ஜெருசலேமைப் போல;

கல்லாடித்தக் கரங்களே, கண்டீர்களா மீண்டுமோர் நபிகள் நாயகத்தை என்று, மதினாவும் மக்காவும் இன்றும் தேடிக்

கொண்டிருப்பதைப் போல;

இந்திய விடுதலைக்கு வித்திட்ட அமைதியின் நாயகனான காந்தியடிகளை, எங்கே எங்கள் காந்தி என்று ஆண்டாண்டு தோறும் விழா எடுக்கும், ஏக்கக் குரல்களைப் போல;

உடல், பொருள், ஆவி மூன்றையும் தான்் பிறந்த நாட்டிற்கு ஈந்து, நல்ல ஜனநாயக வித்தை ஊன்றிட அரும்பாடுபட்ட மனிதருள் மாணிக்கம் பண்டித நேரு பெருமகனாரை, நவம்பர் 14 அன்று தேடிடும் உலகக் குழந்தைகளைப் போல;

அனைத்துலக அரசியல் வரலாற்றில், 'பங்களாதேஷ்' என்றதோர் புதிய நாட்டைப் பூகோளப் படத்திற்கே பூதான்ம் புரிந்த வீரர்ங்கனை, மதச்சார்பற்றக் கொள்கைக்காக தனது இன்னுயிரைத் தந்த எங்கள் இந்திரா காந்தி எங்கே என்று தேடிடும் இந்திய பூபாகத்தைப் போல;