பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். தீவிர வாதத்தைத் தடுத்து நிறுத்திட, தன்னையே மனித வெடி குண்டிற்குப் பலிகொடுத்த ராஜீவ் காந்தியை, எங்கே எங்கள் இளைய தலைமுறை பிரதமர் என்று இந்திய நாடு தேடித்தேடி இன்றும் வருந்துவதைப் போல;

'நீக்கோர இன மக்களும் மனிதர்கள்தாம்! அவர்களுக்குப் பூட்டப்பட்டிருக்கும் அடிமை விலங்குகளை மனித உரிமைச் சம்மட்டியால் அடித்து நொறுக்குவேன்' நீக்ரோ சமுதாயத்திற்கு விடுதலைப் பெற்று தருவதே எனது நோக்கம்' என்றதற்காக, நாடகக் கொட்டகையிலே சுடப்பட்டு மாண்ட அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனை, உலகக் கறுப்பர் இயக்கம், எங்கே எங்கள் லிங்கன் என்று தேடிக் கொண்டிருப்பதைப் போல;

மனித சமுதாயத்தில் கருப்பு - வெள்ளை நிற பேதங்களை உருவாக்கும் மேடு பள்ளங்கள் என்ற உயர்வு - தாழ்வுக் கொடுமைகளை எதிர்த்தொழித்திட, காந்தியடிகளின் அறப் போராட்டச் சுவடுகளைப் பின்பற்றிப் போராடி வந்த மார்ட்டின் லூதர் கிங்கைச் சுட்டுக் கொன்றதற்காகக் கண்ணிர் சிந்தும் நீக்ரோ இனம், எங்கே எங்கள் அமெரிக்க காந்தி மார்ட்டின் லூதர் கிங் என்று கண்ணிர் சொரிவதை போல, ஈழநாடு தேவை என்ற விதையை முதன் முதலாகத் துவிய இலங்கைத் தமிழர் தந்தை, ஈழத்துக் காந்தி செல்வநாயகம் அவர்களை ஈழத் தமிழர்கள், எங்கே எங்கள் தந்தை செல்வா என்று தேடிக் கொண்டிருப்பதை போல;

தன்மான வாழ்விற்கு சுயமரியாதை ஆடை கட்டி, திராவிடரின் இனமானத்தைக் காப்பதற்காக, தன் வாழ் நாளெல்லாம் போராடி மாண்ட தந்தை பெரியாரை, எங்கே எங்கள் தந்தை பெரியார், என்று திராவிடரினம் தேம்பிக் கொண்டிருப்பதை போல; -

தமிழர் பண்பாடே, அவதாரமெடுத்து, "நா மனக்க, நடமாடிய நாவுக்கரசராம் அறிஞர் அண்ணா அவர்கள்,