பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫీ மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். தலை நீட்டிய அந்த வெண்ணிலாகூட, இப்போது

இங்கும் அங்குமாக - புரட்சித் தலைவரின் கல்லறை அருகே,

அதே அலைவதைப் பாருங்கள்:

இந்த அவனியில் எதையோ தேடிடத் தன்னைக் கொளுத்திக் கொண்டதாகத்தான்் தெரிகிறது - அலைகிறது அந்த அம்புலி:

ஆனால், அந்த நிலவினால்கூட, இதுவரையில் அந்தக் கல்லறையின் மனிதாபிமான மகாத்மியத்தைப் புரிந்து கொள்ளக்கூடத் திராணி இல்லை போலும்!

உண்மை, நேர்மை, நாணயங்களை, கண்ணியம் கடமை - கட்டுப்பாட்டோடு தேடுகின்ற எந்த மனிதனும், எதையோ தேடி அலைகின்ற தண்நிலவும்கூட, இடம் மாறி இருக்கின்றனவே தவிர, தகுதியில் ஒன்றுதான்்!

விண்மீன்களை மிகமிகத் தாராளமாக வாரி இறைக்கின்ற காரணத்தால், வானத்தை வள்ளல் என்று எந்த மடையனும் விளம்ப மாட்டான்!

ஏனென்றால், மண்ணிலே - தீய வழிகளிலே சம்பாதிப் பவர்கள்கூட, இப்படித்தான்் எதையெதையோ வாரி இறைக்கின்றார்கள் - பெரும்பான்மையோர்!

அந்த மீன்கள், வானப் பொய்கைக்கா சொந்தம்? இந்த இடத்திலே ஆராய்ச்சித் தேவையில்லை! அதனால் அறிவியல் அசிங்கமாகும் அவமானப்படும்.

அறவிலை பகர்வோர் அவனியிலே இருக்கின்றார்கள்! தனைப்போல, வானமும் காட்சித் தருகின்றதோ.....!

مٹ.

ஏ, வானே....! அந்த நிலா உன்னை என்ன செய்தது?

இருண்ட உனது முகத்தைத் தெளிவாக்கி தெரிய வைத்ததே. அதற்கா இந்தப் பரிசு?

எந்த வாளால் அதை இப்படி வெட்டிச் சித்ரவதை செய்தாய்? நாளும் அறுவை செய்கின்றாய்? ஒரு கால வட்டத்திற்கு?