பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடியேற்றம் காண்போமா!

அறிவுப் பசியோடு அலைந்து கொண்டிருக்கும் மனித சமூதாயத்திற்கு, கருத்து வளம் கொண்ட ஒருவன், தான்் படைக்கும் நூல் விருந்தில் தத்துவங்கள் சிலவற்றை எழுதிக் காட்டுவது மரபு.

அவற்றைப் பற்பல உவமைகளின் வாயிலாக விளக்கு வதும், அவனது கடமைகளில் ஒன்று! சுவைக்காக! சிந்தனைக்காக பண்புகளைப் பரிமாற்றிக் கொள்வதற்காக!

அதனைப் போலவே, ஒரு புத்தகத்தை எழுதி முடித்தவன், தனது வாசகர்களை வரிக்கு வரி கொண்டு வந்து அறிமுகப் படுத்துவதும், சிந்தனைக்கு வழிகாட்டுவதும் அவனுடைய உரிமைகளாகும்.

ஒர் ஊருக்குப் புதிதாக வந்துள்ளவனை வழிகாட்டு வதாகக் கூறி அழைத்துச் செல்பவன், ஊரோரத்திலுள்ள வளைவான பாதையில் நின்று கொண்டு, வானவில்லைத் தன் தலைக்கு மேலே வைத்திருக்கும் மலையையும் காட்டுவான். தவறி விழுந்தால், தேற முடியாத மடுவையும் கானச்

நான் இதை ஏன் கூறுகிறேன் என்றால், "மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.” என்ற இந்த நூலின் கருப் பொருளாகவும் முழுப் பொருளாகவும் - உரிய பொருளாகவும் காட்சி தருகின்ற மக்கள் திலகம் அவர்களை, ஆசிரியன் - வாசகர் என்ற, உரையாடலின் மூலம் காட்ட விரும்புவதனாலேயாகும்.