பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 33

கிரேக்க நாட்டு அறிவுலக மேதை சாக்ரடீஸ், தனது தத்துவங்களை உரையாடல்கள் மூலமாகவே விளக்கினார்: அதற்காக, நான் சாக்ரடீசல்ல! எழுத்தாளன். எண்ண ஆளன் - அவ்வளவுதான்்!

உள்ளத்து உணர்வால். உந்தியெழும் ஆர்வத்தால், கலை உலகக் கண்ணாடி வாயிலாகத் தினந்தோறும் பார்த்து ரசித்த பண்பால், புரட்சித் தலைவரை நீங்களும் நன்கு அறிந்தவர்கள்தாம்!

என்றாலும், இந்த எண்னக் கோட்டத்தை எழுப்பியவன் என்ற காரணத்தால், அவரைப் பல புதிய கண்ணோட்டங் களோடு உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

பிள்ளைக் கணியமுதை தாய்தான்் ஈன்றாளென்றாலும், மற்றையோர் மத்தியிலேயும் தனிமையாகத் தவிக்கும்போதும், தனக்கே சம்பந்தமில்லாமல், 'நீ என் சேய்தான்ே! நான் உன் தாயல்லவா?’ என்ற கேள்வியைக் கேட்டதை, சிற்சில சமயங் களிலே நாம் கேட்டிருக்கின்றோம் பார்த்தும் இருக்கின்றோம்!

அன்பான போதும், அவ்வாறு கேட்பாள், ஆத்திரப்படும் நேரத்திலும் ஆர்ப்பரிப்பாள்!

அதற்கு அந்த குழந்தை விடையளிக்குமா என்ன?

இதனைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ‘பைத்தி யக்காரி! அந்த தத்துநடைத் தத்துவத்தை, குறுஞ் சிரிப்பு குறும்பனைப் பெற்றவள் நீதான்், என்பதை மறந்து விட் டாயா?" என்று, அந்தத் தாயைக் கேட்பரேயன்றி, கையொலித்தா நகைப்பர்!

தாய் - சேய் பாசம், எவ்வாறு இயற்கையுடன் இணைந் ததோ - அதுபோலவே, மக்கள் திலகத்தின் பண்புகளை, நான் இயற்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.

புராண - இதிகாசங்களிலே வருகின்ற கடவுள்களே குறை நிறைவுடையவர்களாக சுட்டப்படும்போது, சாதாரன ஒரு மனிதனிடம் குறை நிறைப் பண்புகள் இருப்பன வென்பது, மனித இயல்புகளேயாகும்.