பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 43

"புரிந்தது! பறம்புமண் பாவைகளே புரிந்தது! வள்ளல் பாரி, தேரைத்தான்் இந்த தேமதுரத் தமிழகத்தின் முல்லைக் கொடிக்கு வழங்கிச் சென்றான்!”

'தமிழ்ப் புலமைச் சுழன்றாடும் தம் மகளிர் இருவரையும்; இறுதியாக - எச்சத்தையும் அன்றோ அவனிக்கு அளித்து அகன்றான் என்று அறிந்தேன்!

காலத்தால், உங்கட்குக் கடனாற்ற நானே வந்திருக் கிறேன், என்று, ஒளவையின் வாய் மலர்ந்ததை, அறிந்தவர்கள் நாங்கள் - நிலவையும் புரிந்தவர்கள்! ஆனால், நீ கூற வந்த உவமையின் பொருள் இதுவோ...!

ஆட்சியினரால் மக்கள் வாழ்வு தேய் பிறையாகி வருகிறது. அவர்கள் வாழ்க்கையை வளர்பிறை போல் நாளும் ஒளி கூட்ட வேண்டும்.

இறுதியில், முகிலைக் கிழித்துப் பாலொளியைப் பரப்பும் முழு மதியைப் போன்ற ஓர் ஆட்சியை, அறிஞர் அண்ணா அவர்கள் நடத்த வேண்டும் என்பதற்குரிய ஆக்கப் பணிகளைப் புரட்சி நடிகர் செய்தார்.

அரசியல் துன்பங்களால், தாக்கப்பட்ட மக்கள், அகம்

குளிரத் தேற்றி மகிழ வைத்தார்! ஏழையர் வாழ்வு மீது தனது அன்பு ஒளியைப் பாய்ச்சினார்!

மக்கள் மீது கவ்வியருந்த இருள், பரங்கிமலைப் பாரியினுடைய உதவி ஒளியைக் கண்டு பறந்தோடியது.

இவ்வாறு, அவர், வான் நிலவைப் போல நின்று, அரசியல், சமுதாயம் என்ற பேதமில்லாமல் ஒளிபரப்பி வந்த மக்களிடையேதான்், "ஒட்டு' என்ற சக்தி இருக்கிறது?

அந்த அரசு சக்தி, நாளை நம்மையும் ஆட்சி பீடத்தில் ஏற்றும் அல்லவா?

அந்த ஆட்சியினால், மக்கள் ஒளியின்பம் பெறுவர் என்பதால், எம்.ஜி.ஆரை நிலவுக்கு ஒப்பிட்டனையோ....!