பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 47

ஏனென்றால், கேட்பவருடைய கவிதைத் தன்மையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.

நீலப் பட்டாடையில் ரத்தினங்களைப் பதித்து வைத்தால் ஆடைகள்தான்் தெரியும். ரத்தினங்கள் புலப்படா!

அதனைப் போல, பொன்மனச் செம்மல், ரத்தினங் களைப் பதித்த ஆடையாக, காட்சிக்கு எளியவராய், பல்லோர் அறிய பாரோர் பாராட்டும் நிலையிலே இருந்தார் என்பதைக் குறிப்பிடத் தான்ே கூறுகின்றீர்?

அப்படியானால், பகலிலே அவர் பார்க்க முடியாதவரா? உவமக் கோளாறு உமக்கு ஏன் இவ்வாறு வந்தது?

புரட்சி நடிகர் அவர்கள், திரை உலக நட்சத்திரம் எட்டாத வான வெளியிலே எட்டி நின்று மின்னுபவரல்லர் அவர்!

மக்கள் மத்தியிலே இரவு - பகலென்று பாராமல், ஒட்டி நின்று ஒளி விடுபவர் அவருக்கு இரவு பகலென்ற பேதமே இல்லை.

அடிவானம் என்று அவரை அழைத்தால் என்ன?

அப்படியானல், அவர் தொட முடியாதவரா?

சித்திரை மாதத்தில் பொழியும் செல்வ மழைக்கு ஒப்பிடலாமோ....!

செல்வ மழைதான்் அவர்! ஆனால், ஆபத்து வெள்ளத்தை உண்டாக்கி, எந்த ஊரைப் பாழ்படுத்தினார்? நம்பியவர்களை யாரை நட்டாற்றில் தவிக்க விட்டார்?

தமிழகத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டபோது - தனுஷ் கோடிக்கு ஒடியவரல்லவா அவர்? ஓர் இலட்சம் ரூபாயை வாரி வழங்கிய வள்ளலல்லவா?

அன்றைய நாணய மதிப்பில் ஓர் இலட்சம் என்றால்,

இன்றைய தினம் அந்தத் தொகை பத்து இலட்சத்திற்கு ஈடாகாதோ...!