பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். தமிழ்த் தொண்டன் அகத்திய முனிவன் வாழ்ந்திட்ட பொதிகை மலையில் தோன்றிடும் தென்றல் காற்றாக அவரை மதிப்பிடலாமா?

ஒ. மதிப்பிடலாமே! ஏன் தெரியுமா? எந்நாட்டிலும் இல்லாத தமிழ்நாட்டு தென்றல்தான்் எம்.ஜி.ஆர்.

யாருக்கு? அவர்மீது காதல் கொண்ட பொது மக்களுக்கு! தென்றல்தான்் அவர், ஏழை மக்களது இதயங்களுக்கு! - திரையுலக ரசிகர்களுக்கு! - அவருடைய மன்றத்து வீரர்களுக்கு! தோகை விரித்து ஆடுகின்ற மயிலைக் காண்கின்றபோது, தங்க ஒளியும் தோற்றுப் போகும் அவருடைய வண்ண மேனியே எனது நினைவுக்குள் நிழலாடுகின்றதய்யா!

அதனால், அவரை மேகம் கண்ட வண்ணத் தோகை மயில் என்கின்றேன்!

தப்பு தப்பு: அவருடைய தங்க நிகர் உடலொளியை வைத்து ஒரு மனிதனை எடை போடாதே. அழகு ஒர் ஆபத்தான் ஆயுதம்!

வேண்டுமானால் இவ்வாறு விளம்பு, பொன்னார் மேனியன் எம்.ஜி.ஆர். எந்த வரவு கண்டும் ஆடாதவர்:

மயில் மேகத்தைக் கண்டுதான்் ஆடும்! குளிரான எழினி தேங்கி, வானத்தில் இருக்கும்போதுதான்், அது ஆடுகின்றது!

வெப்பத்தைக் கண்டு அது ஆடுவதில்லை. பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அப்படியா?

ஊம்...... வசந்த கோகிலம் என்றால், சரியாக இருக்குமா? மாந்தளிர் உண்ட மத மதப்பிலே பாடுவது கோகிலம்! அதாவது குயில்: பேடு வருகையிலே இன்பம் காண, மாந்தோப்பிலே மட்டும் அது மகிழ்ந்து பாடும்!

மக்கள் திலகம், எதையும் எங்கும் உண்பதில்லையே! இவர் நாடெங்கும் சுற்றிச் சுற்றி, மக்கள் நல்வாழ்வுக்குரிய