பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். சுருண்டு விழுகின்ற நேரத்தில், ஒளி போன்ற கைம்மாறு கருதா உதவிகளால், ஊக்கமும், ஆக்குமும் தந்த ஒன்றால் அவரை ஒளியென அழைக்கத் துணிந்தனையோ!...

அம்மம்ம...! அவரைப் புரிந்தா எழுதினாய்? திரி மற்றவர்கட்கு ஒளிகாட்டும்! ஆனால், திரியின் கீழ் எப்போதும் இருள் இருக்கும். அவர் உள்ளத்தில் இருளா இருந்தது? இருண்டவன் ஒளி தருவானா?

ஐயா, இறுதியாக ஒர் உவமையாடு நிறுத்திக் கொள்கின்றேன். இதற்கு மேல் என்னால் ஏதும் சொல்வதற்கு இயலவில்லை!

கவிஞர் வோர்ட்ஸ்வொர்த் 'குழந்தை ஒரு தத்துவம்’ என்றான்: அந்த குழந்தைக்கு ஒப்பிடலாமா எம்.ஜி.ஆரை?

அப்படி வா வழிக்கு இப்போது கூறுகின்றாயே, இதுதான்் உண்மை! இதற்கு மேல்நாட்டுக் கவிஞரிடம் ஏன் கடன் பெற்றிர் உவமையை?

"மக்கள் மெய்திண்டல் உடற்கின்பம் மற்றவர்; சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” என்றார் வள்ளுவப் பெம்மான்! எங்கள் கலைக் குழந்தையின் சிறுகை அளாவிய கூழ் அமிழ்தினும் இனிதாக இருந்தது! அந்த செல்வம் தளிர் நடைபோட்டு, சிறு கையைத் தென்றலிலே மிதக்க விட்டு, வெண் சிறகுக் கூடத்தில் தத்தி நடத்தல் போல நடந்தது!

எறும்புகள் தொடர்ச்சி போலமைந்த புருவங்கள் நெறிந்தன. எள்ளுப்பூ அளவினதாய் எழுந்த நாசியும், வண்டிரண்டு வழி தவறி வந்து, செண்டென விரிந்த தாமரை முகத்தில் குந்தி, இரக்க உணர்வினை இசையாகப் பாடியது!

செம்பவள உதடுகள், முத்துப் பற்கள் பளிச்சிட விரிந்து தமிழர் இதயம் ஒவ்வொன்றிலும் எடுத்தடி வைத்தது!

தாயுள்ளம் கொண்ட நாம், அந்தத் தங்கப் பதுமையை, ‘எங்கள் வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர்” என்றே, ஏற்று