பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் அரங்கம்

சமுதாயத்தை, நல்ல நிர்வாகத்தின் துணையால், கட்டுக் குலையாமல் இயங்க வைத்து, வாழ்கின்ற ஒவ்வொரு தனிக்குடும்பத்தையும் இன்பத்தால் மெய் மறக்கச் செய்து, வரி பயமோ - சமூக விரோதிகளின் தாக்குதலோ, பொருளாதாரப் போட்டியினால் நாணயத்தின் எரிச்சல் ஏற்படுத்தலோ, வேற்று நாடுகளின் படையெடுப்போ இல்லாமல், அந்நாட்டு மக்களைப் பயமின்றித் துங்க வைக்கும் கலையின் பெயர் அரசியல் கலை! அந்தக் கலையை ஆட்சி புரியும் மக்கள் அவைக்குப் பெயர்

ரசியல் அரங்கம்!

வளர்ந்து வரும் ஐனநாயகத்தை, பிளேட்டோவின் ideal State போல; இலக்கியமாக எழுதிப் படிக்க வேண்டிய

நிலைக்குக் கொண்டு போகாமல் இருப்போருக்கு, உடனடியாக

இன்ப மளிப்பது தேர்ந்த குடியாட்சியின் தத்துவங்களாகும்.

ஒரு நாணயமான அரசியல்வாதி எனப்படுபவன், படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் அரிச்சுவடிகள் இவை.

அரசியல்வாதிகள், முழுக்க முழுக்க நாணயமுள்ளவர் களாக நடமாட வேண்டும்!

இவர்களைக் காண்பது இக்காலத்திலே அரிதென்பதால், அரசியலைத் தொழிலாக ஏற்றவர்கள், தங்கள் நாடகத்தை மக்கள் முன் ஆடும் முன்பு, நாணயமற்ற ரேகைகள் கரத்திலிருந்தால் அவற்றை மறைத்துக் கொண்டு, வஞ்சகத்தின் சுருக்கங்கள் முகத்திலிருந்தால், ஒப்பனையால் திரைபோட்டு, வெளியில் வந்தால்தான்், அவர்களது வாழ்க்கை மணம் கமழும் பூங்காவாகத் திகழ முடியும்.