பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி ES

போதை தரும் பதவிகளால் மக்களை சிறிது மறப் பார்களேயானால், அந்த அரசியல்வாதிகளின் ஆயுளை ஏழைகள் மாய்த்து விடுகின்றார்கள்.

இது வரலாற்றின் எச்சரிக்கை உலகம் முழுவதுமாக நடைபெற்ற சம்பவங்களாக இருந்து வருகின்றன!

அரசியல்வாதி ஒருவனின் இலக்கணத்தைத் தெரிந்து கொள்ளாத வரை, ஒரு கலைஞனின் அரசியல் விவேகத்தை, ஒரு மனிதாபிமான அரசியல்வாதியின் சமுதாய வளர்ச்சித் திட்டங்களை, நோக்கங்களை, மக்களால் அறிந்துகொள்ள முடியாது என்பதற்காகவே, இவற்றை நான் குறிப்பிடுகின்றேன்.

முழுமை பெற்ற அரசியல்வாதி ஒருவன் குற்றமற்ற வனாக இருந்தாலும்கூட, இன்றைய சுயநல அரசியலரங்கத்தில், அவனை அயோக்கியன் என்று குறிப்பிடுவதில் பலருக்கும் போட்டி ஆசை வந்து விடுகின்றது.

அதனால்தான்், உலகின் நகைச்சுவை நாடக ஆசிரியர் என்று புகழப்படும் ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்கள், if the voters are foois the segislators will be rascais' grašIsostis

'வாக்காளர்கள் முட்டாள்களாக இருந்தால், மன்ற உறுப் பினர்கள் அயோக்கியர்களாகக் காட்சித் தருவார்கள்” என்றார் அவர்!

முழுமை பெற்ற ஒரு நேர்மையான கலைஞன், தனது எல்லையை விட்டு சிறிது நகர்ந்து, தன்னை வாழவைக்கும் நாட்டை உற்று நோக்க நேர்ந்தால், அந்த நாடு அவனுடைய நடிப்பைக் கண்டு பாராட்டுவது அவனுக்குப் புரிகின்றது:

வறுமையின் சுழற்சியில் இருந்து, தன்னுடைய கலையை ஆர்வத்தோடு பார்க்கின்ற, பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், வாட ஆரம்பித்தால், பண வசூலைப் பற்றிக் கவலைப்படாத எந்தக் கலைஞனும், அரசியல்வாதியாக மாறி, அந்த மக்களின் மத்தியில் அபூர்வியாகி விடுகின்றான்.

நாட்டின் அகத்தைப் படம் பிடிப்பவன், நாடு வறுமை யிலே இருக்கும்போது, அவன் அதைச் சற்றுத் திரும்பிப்