பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#{# மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.

இதுபோன்ற பிரச்னைக்கு எடுத்துக்காட்டாக, மாவீரன் ஜூலியஸ் சீசரைப் படுகொலை செய்துவிட்டு, ரத்தம் உறையாத கட்டாரியோடு ரோம் நாட்டு வீதியில் புரூட்டஸ் என்பவன் நின்று கொண்டு பேசும்போது, ஒருவன் குறுக்கே எழுந்து பேச ஆரம்பித்தான்்!

புரூட்டஸ் பேச்சின் தொடரலையை அவன் குந்தகப் படுத்துகின்றான் என்று எண்ணி, பேச்சைக் கேட்க வந்தவர் களில் ஒருவன், ர, அடிமையே....! அந்தச் சுதந்திர மனிதன் சுதந்திரம் பெற்று தந்த பிறகு, நீ தாராளமாகப் பேசலாம்! அதுவரை, நீ, செவியை அவனிடத்திலே கொடு” என்று, கனல் கக்கும் கண்களுடன் குரல் கொடுத்தான்்!

அரசியல்வாதிகள் உள்ளக் கிளர்ச்சியை, உள்ளுணர்ச்சி யைத் துண்டிவிடும் போதைப் பேச்சுகளைப் பேசுகின்ற போது, குறுக்கே எவன் வந்தாலும், யாராக இருந்தாலும், அவன்மீது மக்கள் கோபப்படுவார்கள்.

ஆனால், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேச வ்ருகின்றார் என்றால், அவ்வாறு சினமோ, சீற்றமோ, அடைவதில்லை. அவரை வெறும் நடிகராக மட்டும் மக்கள் மதித்ததில்லை - தேர்ந்த அரசியல்வாதியாகவும் கருதினார்கள்.

அவருடை பேச்சு, சினிமா கொட்டகையின் வசனமாக மட்டும் கேட்டதில்லை. தத்துவச் சுடரவிழ்க்கும் தீப ஒளியாகத் திகழ்ந்து ஒலித்தது.

தமிழக சட்டமன்றத்திலும் சரி, பொதுக்கூட்டங்களிலும் சரி, இலக்கிய வித்தகர் அவைகளிலும் சரி, அவர் ஆற்றிய சிறப்புரைகள் அதற்குரிய எடுத்துக்காட்டுகளாகவே விளங்கின:

எனவே, எம்.ஜி.ஆர். என்பவர் ஒரு வேடிக்கைப் பொருளு மல்ல - கண்ணுக்கினிய காட்சிப் பொருளுமல்ல - மனத்திற்குரிய கருத்துத் தொகுப்பாகும்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாட்டிலே ஒர் அமைதியைக் கான விரும்பினார்! எப்படிப்பட்ட அமைதி அது!