பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 岔霄

பணிமனைக்குச் சென்றவன், மாலை மணி ஐந்தான் பிறகும் வரவில்லையே என்று, வழிமேல் விழி வைத்துப் பாவை ஒருத்தி காத்திருந்தாள்!

ஆளன் வருவதைக் கண்டு, அவள் முகம் அன்றலர்ந்த தாமரையாயிற்று!

நெருங்கினாள் நெஞ்சம் நிறைந்த நாயகனை! நிலா முகம் சீதளம் சிந்திற்று! மின்னிற்று செவ்விதழ்கள்!

'வாருங்கள் அத்தான்்’ என்றாள்!

'வழியெல்லாம் நீயாகத்தான்் இருந்தாய்' என்றான் வந்தவன்!

இருவரும் சிரித்தனர்! அந்தச் சிரிப்பைத் தென்றல் ஏந்திற்று! தொட்டிலில் துயிலும் சீதளச் சிறு மழலையின் செவியில் ஊற்றிற்று!

விழித்துத் தான்ாக சிரித்தக் குழந்தையின் கன்னத்திலே, அப்போது ஒரு குழி விழுந்தது!

விழுந்த அந்த மழலையின் கன்னக் குழியிலே விளங்கிய இருளில், கவிதா நோக்குடையவன் கண்ணுக்கு - ஓர் அமைதி தென்படும்:

அந்த அமைதியை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஏழையர் இல்லங்களிலும், நல்லோர் உள்ளங்களிலும், எல்லாக் காலங் களிலும் காண விழைந்தார்!

இவ்வளவையும் கூறி வருகின்ற நானும் ஒர் அரசியல் வாதி தான்்! என் வீட்டிலே அந்த மகிழ்ச்சி உண்டா? இல்லையே! சாகும் வரை வாராது போலிருக்கே! எனக்கே இந்த கதி என்றால், ஏழைகளுக்கு என்னவோ.....!

வெறும் தத்துவங்களை மட்டும் உலகுக்குக் கூறி நஞ்சருந்திய மாமேதை சாக்ரடீஸ் காலத்தில், நடிகர்கள் பற்றியும் கலைஞர்கள் குறித்தும், கவிஞர்கள் மேலும் தவறான ஒர் எண்ணமிருந்தது!