பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கல்ைமணி 57

பாய்ந்திருந்த அம்பைப் பானர்கள் பார்த்தார்கள்! உடும்பின் உடலிலே ஊடுருவிய அம்பை உருவினார்கள்! அதை எய்தவன் யார் என்று அறிய முற்பட்டார்கள்!

எவர் பெயரும் அந்த அம்பில் எழுதப்பட்டிருக்க வில்லை; வியந்தார்கள். யார் இந்த வில் வித்தகன் என்று?

மாவீரன் வாலியை மறைந்திருந்து தாக்கிய காகுத்தனைப் போன்ற ஒருவனுடைய அம்பாக இருக்குமோ? என்று எண்ணினார்கள்:

எவன் எய்தான்் அதை, என்பதைக் கண்டிட அந்த பாணர்கள் சற்று முன்னோக்கியும், பின்னோக்கியும் சென்று பார்த்தார்கள்:

தாக்கப்பட்ட வேழம், குருதி சிந்தியபடியே தரையிலே வீழ்ந்து கிடைப்பதைக் கண்டார்கள்!

வேங்கை ஒன்று ரத்தம் கசிந்தவாறே களைத்துப் பெரு மூச்சோடு, எழ முடியாமல் படுத்திருப்பதை நோக்கினார்கள்:

மான், காட்டுப் பன்றி, உடும்புகளின் உடல்கள் எல்லாம் செந்நீரால் சிவத்து கிடந்தன!

வீழ்ந்து கிடக்கும் இவை அனைத்தையும் வீழ்த்தியவன், சிறந்த வில்லேருழவனாகத்தான்் விளங்க முடியும் என்ற வியப்பிலாழ்ந்திருந்தபோது, அருகே இருந்த குன்றை அவர்கள் நிமிர்ந்து நோக்கினார்கள்!

அம்பை எய்தவன், அதோ எதிரே உள்ள குன்றின்மீது தான்் இருக்க வேண்டும். கீழ்நோக்கி விடப்பட்ட அம்புதான்், அதன் வேகக் குறிதான்், இத்தனை மிருகங்களையும் தாக்கி இருக்கின்றது' என்ற ஆச்சரியத்தோடு காணப்பட்டார்கள்:

அப்போது ஒரு வேடன் ஒடி வந்து, 'உங்கள் கையிலே இருக்கின்ற அம்பு என்னுடையது. தயவு செய்து கொடுங்கள்’ என்றான்!

'பெயர் பொறிக்கப்படாத இந்த அம்பு உன்னுடையதா? விற் கலையில் இத்தகைய வியப்புமிக்கத் திறமை பெற்ற உனக்குப் பெயரில்லையா?”