பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 69

கானலை நம்பி ஓடுகின்ற மான், கண் நிலைக்குத்தி, கடை மணியில் நீர் சொரிய, "நா நிலந்தேய, சுருண்டு விழுந்து

சாகுமாம்!

புகழ், கானல் நீரைப் போன்றது; அடிவானை ஒத்து தோன்றுவதுண்டு.

ஆனால், அந்தப் புகழை மண்ணில் தோன்றிய எவனும் அனைத்தாக வேண்டும்! காலக் கட்டாயம் இது!

'ஐம்புலன்களையும் - ஆறறிவுகளையும், நொடியில் சிறை பிடிக்கும் சக்தி புகழ் என்று மனோதத்துவம் கூறுகின்றது.

மனமாகாதவன்; ஒரு பெண்ணைப் புகழ்ந்தால், அவள் காதலியாக மாறுகின்றாள்!

குழந்தையை நாம் புகழ்ந்தால், அது சிரிக்க ஆரம்பிக்கின்றது:

மன்னர்களைப் புகழ்ந்து - பாணர்கள், கவிஞர்கள் பெரும் பரிசுகள் பெற்றது உண்டு.

அவற்றிற்கு ஆற்றுப்படை இலக்கியங்களே ஆதாரங்கள்! அமைச்சர்களை இன்று புகழ்ந்து கொண்டே இருந்தால், அன்றாடம் அரசியல் லாபங்கள் பெறலாம்:

ஒரு கால கட்டத்தில், மறைந்த சோவியத் அதிபர் ஸ்டாலினையே புகழ் பாடியவர், பிறகு, ரஷ்யா அதிபரானார் குருசேவ்!

ஆனால், ஏழைகளை எவன் புகழ்வான்! அதனால் ஏழைகளைப் புகழ்ந்து பாராட்டும் எவனும், ஒரு காலத்தில் ஒரு கட்சித் தலைவராகலாம்! ஆட்சியிலேயும் அமரலாம்!

எனவே, புகழ் போதை எப்படிப்பட்டவனையும், அடிமைப்படுத்திவிடும் சக்தி பெற்றது:

அதனால்தான்், அறிஞர் அண்ணா அவர்கள், புகழைக் கண்டு கூச்சப்பட்டார்! புகழ்பவனைக் கண்டு அச்சப்பட்டார்! அதை வெளிப்படையகாவும், கூறினார்; நான் சாமானியன்’