பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். என்னைப் புகழ்பவர்களைக் கண்டால் அச்சப்படுபவன்' என்றார்:

அவருக்கு உருவான புகழ் அவரது அறிவுக்கும் பண்புக்கும் காலம் தந்த கொடை, இயற்கை கொடுத்த வரம்; அவர் பணிவுக்கு மீறிப் பீறிட்ட அற்புத சக்தி அவர் மக்களை அரவணைத்த அன்புக்குரிய, மரணமிலாப் பெருவாழ்வு!

சாதாரண அண்ணா என்ற மூன்றெழுத்துப் புகழின் ஆலமரத்து நிழலிலே, கலைஞர் தலைமையிலான தி.மு.க; புரட்சித் தலைவர் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க. என்ற அனிதேர் புரவி படைகளோடு இந்தக் கட்சிகள் எல்லாம் தங்கி இளைப்பாறுகின்றன:

அகில உலக அரசியலிலே இல்லாத அற்புதச் சக்தி என்ன வென்றால், அறிஞர் அண்ணா அவர்களையே ஆசானாகக் கொண்ட ஒரு கட்சி, தமிழகத்தை ஆளும் கட்சி! அதன் ரத்தமான இன்னொரு பிரிவுக் கட்சி, எதிர்கட்சி!

மறுமுறை முன்பு ஆண்டிருந்த கட்சி எதிர்கட்சி! எதிர்கட்சி யாக இருந்த கட்சி ஆளும் கட்சி இந்த அற்புதம் அகில உலக அரசியலிலே எங்கே நடந்தது?

ஓராண்டு, ஈராண்டல்ல இந்த அற்புதம் அவதாரம் எடுத்தது. ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக! இதற்குக் காரணம் அண்ணாவின் அறிவு தந்த புகழ் சக்திதான்் அடிப்படை.

எனவே, அண்ணாவின் புகழ், அவரால் தேடி ஓடிய ஒன்றல்ல: அவரை நாடி தேடி ஓடி வந்த காலக் கொடை.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் வயலுக்கு, அண்ணா என்ற அறிவு உரத்தைப் போட்டு, உழுது பயிரிட்ட அகில உலக அற்புத 'உழவாரப் படையின் தலைவர்' எம்.ஜி.ஆர்.:

ஒருவருடைய புகழைப் பயன்படுத்திக் கொள்ளவும் தகுதி வாய்ந்த ஒரு மனிதத் தன்மை, நன்றி மறவா நல்லுணர்வு,