பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். 'துணிவான முயற்சி இல்லையானால், மனித சமுதாயத்தின் நாகரீகம் முழுவதும் அழிந்து போகும்' என்ற, தனி மனிதத் தத்துவத்தை தலைமேல் சுமந்தவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். எப்படி?

'அண்ணா என்ற பெயரையும், உருவையும் எம்.ஜி.ஆர். துணிவான முயற்சியோடு கையாளவில்லை என்றால், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் நாகரிகமான 'மக்கள் குரலே மகேசன் குரல்' என்ற தத்துவமும், சமுதாய நாகரிக்கான 'ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்டோம்!' என்ற ஏழ்மை நிவாரணத் தத்துவமும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மனித வாழ்வின் மும்மணி உணர்வுகளும் - அழிந்து போயிருக்கும்! தமிழ்ச் சமுதாயம் செய்த தவப் பயனால் எம்.ஜி.ஆர். அந்தத் துணிவான முயற்சியில் ஈடுபட்டார்!

ஒவ்வொரு நாட்டிலும் அற்புதமான மனிதர்கள் தோன்துகின்றார்கள். ஒவ்வொரு புதுமைகளை அவரவர்கள் ஈடுபட்ட துறைகளிலே சாதிக்கின்றார்கள்! அதனால், புகழ்

மாலைகள் சூட்டப்படுகின்றார்கள்.

இத்தகைய நிலைமையில் உலகம் இயங்கும்போது, வள்ளல் வல்வில் ஒரியைப் போல அனைவராலுமா பெற்ற புகழையும் துறக்க முடியுமா?

ஒரு மனிதன் செத்ததற்குப் பிறகு புகழை இழப்பது வேறு! அவன் உயிரோடிருக்கும்போது புகழைத் தான்ம் செய்வதென்பது வேறு:

இறந்த பிறகு, புதைக்கப்பட்டவரின் புகழை மண்

عه هrير

பெற்றுக் கொண்டு மணக்கிறது; உயிரோடிருக்கும்போது புகழ் கை மாறுவதைப் பார்த்ததில்லையா நாம்?

மண் பொறுக்கும்; மனம் பொறுக்குமா? பொறுத்த மண் மீண்டும் மனக்கிறது - மற்றவர்களும், அதை நுகர, மகிழ!

பொறுத்த மனம் - பொறாமையை, குரோத விரோத உணர்வுகளை எழுப்பியல்லவா பெரும் போரைக்கூட உருவாக்கி விடுகின்றது!