பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 73

நீண்ட நெடுங்காலத்தின் ஒட்டத்திற்கு ஏற்றவாறு, வல்வில் ஓரி, பாரி, காரி, குமணன், அதியமான் போன்றவர் களுக்கு அடுத்தவாறு, இந்த உலகம் இரண்டாவது முறையாக மற்றொரு அநுபவத்தைப் பெற்றிருக்கின்றது!

புரட்சித் தலைவரின் கலையுலகப் புகழுக்குச் சான்றாக, மதுரை மாநகரத்தின் மூன்று லட்சம் மக்கள், தங்களது அன்பு காணிக்கையாக; நூற்றிப்பத்து சவரன்களாலான தங்கவாள் ஒன்றை, பொன்மனச் செம்மலுக்கு பரிசாகக் கொடுத்தார்கள்:

சீன ஆக்ரமிப்பினால் ஏற்பட்ட இந்தியா - சீனா போர் நிதிக்காக, மக்கள் கொடுத்த அந்தப் பரிசை, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்படியே மத்திய அரசுக்குத் தான்மாகக் கொடுத்தார். இதற்குப் பெயர் என்ன? தனது புகழையே தான்மாகக் கொடுத்ததற்கு ஈடல்லவா?

பேரறிவாளன் செல்வம் ஊருணியென சுரந்து கிடக்கை யில், தன்னுடைய புகழின் சின்னமான தங்க வாளை, வீரத்திற்கு அடையாளமாகக் கிடைத்த அன்பளிப்பை, மக்களது அன்புக் காணிக்கையை, நாட்டின் நெருக்கடி நேரத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கொடுத்தாரென்றால், சிந்திக்க வேண்டிய ஒர் அரசியல், சமுதாய சித்தாந்தம் தான்ே இது:

பாரதக் கன்னன் போர்க் களத்திலே தனது தர்மத்தைத் துறந்தான்ாம்! இதிகாசத்தின் இயம்பல் இது!

கன்னன் தான்் செய்த தர்மங்களைத் தான்மாக அளித்து, அதனால் மீண்டும் ஒரு புகழைப் பெற்றுக் கொண்டான்.

சங்க கால ஒரி, இருபதாம் நூற்றாண்டில் பரங்கிமலைப் பாரியாகக் காட்சியாகி, தான்் பெற்ற புகழையும் தனக்கென வைத்துக் கொள்ளாமல், இந்த நாட்டுக்கே தான்ம் தந்து விட்டமைக்கு, தமிழ் இலக்கிய நேரிடைச் சான்று அல்லவா இது?

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். மக்களுக்கு வாரி வழங்கியவை செல்வம் மட்டுமல்ல, அந்தச் செல்வத்தால் பெற்ற புகழையும், தங்க வாளோடு சேர்த்துத் தான்மாக்கிக்