பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 75

இந்தப் பாடலைக் கண்ட ஒளவையார் எனும் பெண்பாற் புலவர், 'கொடைஞனை உலகம் முழுவதும் தேடினாலும் காண முடியாது’ என்ற தகடுர் கவிஞர் கருத்தினை ஏற்க மறுத்தாள்!

'வீரன் நூற்றி ஒன்றில் ஒருவன், புலவன் ஆயிரத் தொன்றில் ஒருவனாகப் புலப்படுவான். நல்ல மேடைப் பேச்சாளன் நூறாயிரத்தில் ஒருவன். கொடையாளி உலகிலே இருக்கின்றானோ, இல்லையோ தெரியாது' என்று தகடுர் யாத்திரைக் கவிஞர் கருத்தை ஒப்ப மறுத்தவளாய், அவரைவிட ஒருபடி மேலே சென்று, கருத்தாட்சியோடு ஒளவையார் பாடுகிறார்!

தருகின்றவன் எவனோ, அவன்தான்் தாதா எனும் தகுதியான பேரைப் பெறுகின்றான் நடுத்தர மக்களிடம்!

'இலன் என்னும் எவ்வம் உரையாமை - ஈதல்

குலனுடையான் கண்ணே உள'

- என்று திருவள்ளுவரும் குறிப்பிடுகின்றார்!

"தந்தவன் தரணி ஆள வந்தவன்', ஈகை புரிந்து வந்த கை. செங்கோலை ஏந்தும் அலைகள் சூழ் உலகை நலமாய் ஆளும்’ என்ற, தமிழ் அறங்களுக்கு ஏற்ப, பொன்மனச் செம்மல் ஏழைகளுக்குத் தன்னாலியன்ற வரைக் கொடுப் பதையே மதமாகக் கொண்டார்!

அதன் பலன்தான்், ஆட்சியிலே அவரைப் பன்னி ரண்டாண்டுக் காலம் அசைக்கவோ, ஆட்டவோ முடியாத சக்திகளே இல்லாமற் போயின என்பதை உலகு கண்டது!

ஒரு மனிதனுடைய வாழ்க்கை, பல கோணங்களிலே நாட்டிற்குப் பயன்பட்டாக வேண்டும்! பிறந்த மண்ணிற்கு அவன் ஏதாவது பெருமையை உருவாக்க வேண்டாமா? பிறப்பின் பண்பன்றோ!

வான் மழை, தென்னை மரத்தின் கீழே விழும்போது, இளநீராக மாறுகின்றது!

பனை மரத்தின் வேரில் அதே மழை பாயும்போது, பதநீராக பயன் தருகின்றது!