பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

了窃 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். கணி மரத்தினடியில், அந்த தண்ணிர் தவழ்ந்து

ஒடும்போது, கனிச் சாறாகின்றது!

'பூக் கிண்ணத்தில், அந்த எழினியின் சொட்டு எழிலாக

அமர்ந்தபோது தேனாக இனிக்கிறது!

முத்துச் சிப்பியினுள் அந்த மேகம் உமிழ்கின்றபோது, நாடு போற்றும், நல்முத்தாக மரியாதையும் மதிப்பும் பெறுகின்றது!

அதுபோல, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க்கை, கலை உலகத்திலே உயிர்பெற்றபோது, மக்கள் மன ஆசனத்திலே அமர்ந்த நடிப்புருவமாக நடமாடியது.

வாரி வாரி மக்களுக்கு அவர் ஈந்தபோது, அந்த ஈகை, பரங்கிமலைப் பாரியாகப் பெயரெடுத்தது!

இந்த புவனியின் மானத்தைக் காப்பதற்காகத் தனது புகழையே தான்மாகத் துறந்தபோது, வல்லில் ஒரி'யின் கொடை போன்ற அறமானது!

கட்சிப் பணிகளில் ஈடுபட்டு அவர் கடமையாற்றிபோது, சிரம் பழுத்தத் தொண்டனின் சேவையானது.

அரசியலரங்கத்திற்கு அந்த ஒளி விளக்கு மக்களது இருளகற்றி, மருளகற்றி, வெளிச்சம் விளக்கியபோது அறிஞர் அண்ணாவின் பண்பாக உருவேற்றது!

எனவே, பொன்மனச் செம்மலின் வாழ்க்கை குறிப்பிட்ட

ஒரு கோணத்திலேயே முடங்கிப் போகவில்லை!

முப்பட்டைக் கண்ணாடியின் வழியாக ஊடுருவிய பகலவன் ஒளி, பல வண்ணங்களோடு, பல கோணங்களில், மக்கள் இதயமென்ற பலகணி வழியாகப் பதத்தோடு எட்டிப் பார்த்தது. மக்கள் திலகம் இதுவரை அரசியல் அரங்கம் என்ற பிரகாரச் சுற்றுகளில், அலங்காரப் பவனியுடன் மக்கட் திரள் புடை சூழ பவனி வந்தார்!

அடுத்து, கலைஞன் அமைக்கும் கலைக்கோயில் பகுதி யில் அவரை அருவருமாகக் காணலாமா?