பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதையும் சுமக்கத் தயார்! ஏனென்றால், எதையும் தாங்கும் இதயப் பயிற்சியை அளித்த ஏந்தல் - என் அண்ணா அவர்களிடம் ஞானப் பிச்சை ஏந்தியவன் நான்!

சங்க காலம் முதல் இந்த இருபதாம் நூற்றாண்டு வரை, ஏழையாகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, உழைப்பால் உயர்ந்து, திரண்ட செல்வம் ஏந்தி, மக்களுக்காக சகல துறைகளிலும் அதை வாரி வழங்கும், ஒப்பாரும் மிக்காரு மற்ற முதலமைச்சராக வாழ்ந்த ஒரு சாதரான மனிதனை, தமிழ் இலக்கியங்களிலே மட்டுமல்ல - உலக இலக்கியங் களிலேகூட இருந்தால், உதாரணத்திற்கு காட்டுங்கள்:

மனிதம் மனக்கும் மனிதாலயமான எம்.ஜி.ஆர். மக்கள் நெஞ்சிலே அன்றும், இன்றும், என்றும் மனிதாபிமான அறமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அன்னைத் தமிழின் ஞானப் பால் அருந்தியதால் ஏற்பட்ட எனது அன்பை, பண்பை அவருக்குக் காணிக்கை யாக்கிக் களிக்கின்றேன்...!

அன்பன் என்.வி. கலைமணி